மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 செப் 2019

சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அளித்த சலுகை!

சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அளித்த சலுகை!

சிதம்பரத்தின் சிபிஐ காவலை நாளை வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மறுநாள் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு மூன்று முறை சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் அவரக்கு விதிக்கப்பட்ட காவல் முடிவடைந்தது.

இந்த நிலையில் சிபிஐ காவலுக்கு எதிராக சிதம்பரம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பானுமதி, போபண்ணா அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 2) மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிதம்பரம் தரப்பிலிருந்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும், சிபிஐ தரப்பிலிருந்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜும் ஆஜராகினர்.

அப்போது சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், “முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டில் கைது செய்யப்பட்டு கடந்த 12 நாட்களாக சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 74 வயது ஆகிறது. அமலாக்கத் துறை வழக்கில் சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு வரும் 6ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அதுவரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குங்கள் அல்லது வீட்டுக் காவல் வையுங்கள். தயவு செய்து திகார் சிறையில் அடைத்துவிடாதீர்கள்” என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால் நீதிபதிகள், “அரசியல் கைதிகளை மட்டும்தான் வீட்டுக்காவலில் வைக்க முடியும்” என்று கைவிரித்துவிட்டனர்.

சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ வழக்கறிஞர் கே.எம்.நட்ராஜ், “குற்றம்சாட்டப்பட்டவரான சிதம்பரம், தான் சிபிஐ காவலிலோ அல்லது நீதிமன்றக் காவலிலோ இருக்க விரும்புகிறேன் என்று சொல்ல முடியாது” என்ற வாதத்தினையும் முன்வைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து சிபிஐ நீதிமன்றம் பரிசீலனை செய்ய வேண்டுமென குறிப்பிட்டனர். திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்ற கபில் சிபலின் கோரிக்கையை ஏற்கும் வகையில், “சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பாக இன்று சிபிஐ நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை எனில், அவருக்கு விதிக்கப்பட்ட சிபிஐ காவல் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்படும்” என்றும் உத்தரவிட்டனர். வழக்கையும் வரும் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஆனால், மதியத்திற்குப் பிறகு சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் கோரிக்கையை ஏற்று, வரும் 5ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட வழக்கானது நாளையே விசாரணைக்கு வரும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சிதம்பரத்தின் காவல் முடிந்ததையடுத்து, டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது ஜாமீன் வழங்க வேண்டுமென சிதம்பரம் தரப்பிலிருந்து மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு சிபிஐ தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சிபிஐ தரப்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ப.சிதம்பரத்துக்கு மட்டும் என்ன சிறப்பு சலுகை. இதே சலுகை சாதாரண மனிதனுக்கு வழங்கப்படுமா? அனைவருக்கும் சமமான நீதி பின்பற்றப்பட வேண்டும்” என்றார். மேலும் சிபிஐ காவலை மேலும் ஒருநாள் நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் சிதம்பரத்தின் சிபிஐ காவலை நாளை வரை நீட்டித்த நீதிபதி அஜய் குமார் குஹார், இடைக்கால ஜாமீன் மனு நாளை பிற்பகல் 3.30 மணிக்கு விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அறிவிக்கப்படாத துணை முதல்வர்கள்!


சதாசிவம் இனி ஆளுநர் இல்லை: எடப்பாடிக்கு இழப்பா?


எடப்பாடியை விமர்சிக்க விரும்பவில்லை: தினகரன்


லண்டன்: உடையும் எடப்பாடியின் இரண்டாவது ஒப்பந்த மர்மம்!


சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றமா?


வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

திங்கள் 2 செப் 2019