மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஏப் 2020

கலைஞர் வீட்டு நிகழ்ச்சியில் விஜய்

கலைஞர் வீட்டு நிகழ்ச்சியில் விஜய்

‘முரசொலி’ நாளிதழ் ஆசிரியர் முரசொலி செல்வத்தின் பேத்தி நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தனது மனைவியுடன் பங்கேற்றார்.

சென்னை லீலாபேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விஜய்யும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, கவிஞர் வைரமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறன், மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் ஆகியோரையும் விஜய் சந்தித்து பேசினார்.

விஜய் நடிப்பில் தற்போது பிகில் திரைப்படம் தயாராகிவருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதன்முறையாக அவர் பாடிய ‘வெறித்தனம்’ பாடல் நேற்று வெளியானது.

சென்னைத் தமிழில் வெளியாகியுள்ள இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 18 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அறிவிக்கப்படாத துணை முதல்வர்கள்!


சதாசிவம் இனி ஆளுநர் இல்லை: எடப்பாடிக்கு இழப்பா?


லண்டன்: உடையும் எடப்பாடியின் இரண்டாவது ஒப்பந்த மர்மம்!


எடப்பாடியை விமர்சிக்க விரும்பவில்லை: தினகரன்


புழல் சிறை: முஸ்லிம் கைதிகள் மீது தாக்குதலா?


திங்கள், 2 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon