மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றமா?

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றமா?

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமணி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், புதிய தலைமை நீதிபதியாக தஹில் ரமணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அதற்கு முன்னர் மகாராஷ்டிரா உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்துவந்தார்.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வரும் தஹில் ரமணியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலிஜியம் குழு முடிவெடுத்துள்ளதாக தி டெலிகிராஃப் இந்தியா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விரைவில் வெளியிடப்படவுள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக மூத்த நீதிபதிகள் மற்றும் மிகப்பெரிய நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பில் உள்ளவர்கள், அதைவிட சிறிய நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்படுவதில்லை. ஆனால், 75 நீதிபதிகள் பலத்துடன் இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய, அதேநேரம் மிகவும் பழைமைவாய்ந்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஒருவரை, இந்தியாவின் மிகச்சிறிய உயர் நீதிமன்றமான மேகாலயாவுக்கு மாற்றுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் மேகாலயாவில் தற்போதைய நீதிபதிகளின் எண்ணிக்கை மூன்று மட்டுமே. தஹில் ரமணி மாற்றப்படுவதற்கான காரணத்தையும் கொலிஜியம் ரகசியமாகவே வைத்துள்ளதாக டெலிகிராஃப் செய்தி கூறுகிறது.

இந்தியாவின் மிக மூத்த நீதிபதிகளில் ஒருவர் தஹில் ரமணி. தற்போது நாட்டிலுள்ள இரண்டு உயர் நீதிமன்றப் பெண் தலைமை நீதிபதிகளில் இவரும் ஒருவர். மற்றொருவர் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள கீதா மிட்டல்.

தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள் 2,57,234, கிரிமினல் வழக்குகள் 40,774, புதிதாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 1,04,847 என மொத்தமாக 4,02,855 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், மேகாலயா உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள் 393, கிரிமினல் வழக்குகள் 73, புதிய மனுக்கள் 570 என வெறும் 1,036 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: பன்னீர் மீது எடப்பாடி ஊழல் புகார்!


லண்டன் பறந்த தனுஷ் டீம்!


ஆளுநர் தமிழிசை: அடுத்த பாஜக தலைவர் யார்?


சதாசிவம் இனி ஆளுநர் இல்லை: எடப்பாடிக்கு இழப்பா?


லண்டன்: உடையும் எடப்பாடியின் இரண்டாவது ஒப்பந்த மர்மம்!


திங்கள், 2 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon