மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 23 பிப் 2020

கவின் குடும்பத்துக்கு ஆதரவாக சாக்‌ஷி

கவின் குடும்பத்துக்கு ஆதரவாக சாக்‌ஷி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள கவின் குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தமயந்தி இவருடைய மகள் ராஜலட்சுமி மற்றும் மருமகள் ராணி. இவர்களும் தமயந்தியின் கணவர் அருணகிரி மற்றும் மகன் சொர்ணராஜன் ஆகியோரும் அந்தப் பகுதியில் சீட்டு கம்பெனி ஒன்றை அனுமதி இல்லாமல் 1998ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை நடத்தி வந்துள்ளனர்.

இந்த சீட்டு கம்பெனியில் 34 நபர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர். இவர்கள் யாருக்கும் பணத்தை திருப்பி தரவில்லை எனவும் தங்களுடைய பணம் 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை தங்களுக்கு பெற்று தர வேண்டும் எனவும் கடந்த 2007ஆம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட சொர்ணராஜன் மற்றும் அருணகிரி ஆகியோர் இறந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தமயந்தி, ராணி மற்றும் ராஜலட்சுமி ஆகியோருக்கு மோசடி வழக்கில் 5 வருட சிறை தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் சீட்டு நிதியங்கள் சட்டத்தின்படி இரண்டு வருட சிறை தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஜலட்சுமி, நடிகர் கவினின் தாயார் ஆவார். இந்த செய்தி வெளியானபின் சமூக வலைதளங்களில் கவினும் அவரது குடும்பத்தினரும் விமர்சிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து சகப் போட்டியாளராக இருந்து சமீபத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாக்‌ஷி, கவின் குடும்பத்தினரை விமர்சிக்கக்கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் கவின் மீது சாக்‌ஷி தொடர் குற்றச்சாட்டுகளை வைத்துவந்த நிலையில் தற்போது, “ இந்த அசாதாரணமான சூழலில் கவின் குடும்பத்தினரைக் கிண்டலடிக்க வேண்டாம் என என் ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். எனக்கும் கவினுக்கும் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அவருடைய குடும்பத்தினரிடையே அல்ல. எனவே அவர்களைக் கிண்டலடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு ஆதரவு அளியுங்கள். நன்றி” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!


பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்!


அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


சனி, 31 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon