மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 23 பிப் 2020

பால் விலை உயர்வு: உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

பால் விலை உயர்வு: உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்தி தமிழக அரசு கடந்த 17ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. மேலும், எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 வரையிலும், பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 வரையும் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வானது கடந்த 19ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ற எதிர்க்கட்சிகள் பால் விலை உயர்வை திரும்பப் பெறவும் வலியுறுத்தின. ஆனால், போக்குவரத்து செலவுகள் அதிகரித்ததால் பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் பால் விலை உயர்வை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “ கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது நியாயமாக இருந்தாலும் விற்பனை விலையை ஒரேயடியாக ரூ.6 வரை உயர்த்தியது தவறான முன்னுதாரணமாகும். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான். குழந்தைகளுக்கு பால்தான் முக்கிய உணவாகும். எனவே குழந்தைகள் பாதிக்கப்படாத வகையில் பால் விலை உயர்வை ரத்துசெய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த மனு வரும் 2ஆம் தேதி நீதிபதிகள் சத்தியநாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா பாமக?


சனி, 31 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon