மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

விஜய் ஆண்டனி - விஜய் மில்டன் இணையும் புதிய படம்!

விஜய் ஆண்டனி - விஜய் மில்டன் இணையும் புதிய படம்!

விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தை ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கவுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் மினிமம் கேரண்டி நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனிக்கு சமீபத்திய சில திரைப்படங்கள் கைகொடுக்கவில்லை. அண்ணாதுரை, திமிருபுடிச்சவன், காளி என அவரது படங்கள் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை ஈர்க்காத நிலையில் தனது அடுத்தடுத்த படங்களின் மீது அதீத கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது விஜய் ஆண்டனி, மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படம், செந்தில் குமார் இயக்கத்தில் சத்யராஜ், இந்துஜாவுடன் காக்கி, ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் அக்னிச் சிறகுகள் என தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் ஆண்டனி. இப்படத்திற்கு மழை பிடிக்காத மனிதன் என வித்தியாசமாகத் தலைப்பிடப்பட்டிருக்கிறது. அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, பத்து எண்றதுக்குள்ள, கடுகு, கோலி சோடா, கோலி சோடா 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கும் 6ஆவது படமிது.

இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் சார்பில் கமல் போஹ்ரா, ஜி. தனஞ்செயன் மற்றும் தியா மூவிஸ் சார்பில் பிரதீப் ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர். விரைவில் இப்படம் குறித்து முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா பாமக?


சனி, 31 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon