மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

மங்காத்தா: டிரெண்டாக்கிய அஜித் ரசிகர்கள்!

மங்காத்தா: டிரெண்டாக்கிய அஜித் ரசிகர்கள்!

அஜித் நடித்த மங்காத்தா திரைப்படம் வெளியாகி இன்றோடு எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இயக்குர் வெங்கட் பிரபு படத்தில் பணியாற்றிய அனுபவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

அஜித் திரையுலகப் பயணத்தில் வசூல் சாதனை படைத்த படங்களில் மங்காத்தாவுக்கும் முக்கிய இடமுண்டு. அஜித்தின் வில்லத்தனமான நடிப்பு பரவலாக பேசப்பட்டது. ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த அப்படம் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் படத்தின் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் அதிகமாக பகிர்ந்துவரும் அஜித் ரசிகர்கள், டிவிட்டரில் மங்காத்தா என்ற டைட்டிலை டிரெண்டாக்கியுள்ளனர்.

படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தை டிவிட்டரில் பதிவேற்றியுள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, “முதல் நாளில் எடுத்த முதல் காட்சி. இந்த சீன் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். இந்த புகைப்படத்தை பகிர்ந்த செந்தில் அவர்களுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.

மங்காத்தா படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து விரைவில் அஜித்துடன் இணைந்து மீண்டும் பணியாற்றவுள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்தார். ஆனால் சிவா இயக்கத்தில் தொடர்ச்சியாக நடித்துவந்த அஜித் அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் வரிசையாக படங்களில் நடித்துவருகிறார்.

இதுகுறித்து கருத்துதெரிவித்துள்ள வெங்கட் பிரபு, “ என் மீது அன்பு வைத்துள்ள ரசிகர்களுக்கு நன்றி. வேற என்ன சொல்றது. அவருக்கு தோணும்போது சொல்லுவார். மங்காத்தா படம் மீது நீங்கள் வைத்துள்ள அன்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா பாமக?


சனி, 31 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon