மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 23 பிப் 2020

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ரஜினியிடம் விசாரணை?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ரஜினியிடம் விசாரணை?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தேவைப்பட்டால் ரஜினியிடம் விசாரணை நடத்துவோம் என்று விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை 14 கட்ட விசாரணை நடைபெற்றுள்ளது. 379 பேரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், 555 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில் விசாரணைக் காலம் 3ஆவது முறையாக மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகரிடம், ரஜினியிடம் விசாரணை நடத்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “தேவைப்பட்டால் இந்த சம்பவங்கள் குறித்து விவரங்கள் அறிந்த அனைவரையும் அழைத்து விசாரணை நடத்தப்படும்” என்று அவர் பதிலளித்தார்.

மேலும், “அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து காவல் துறையினர், காவல் துறை தரப்பில் காயம் அடைந்தவர்கள், வருவாய்த் துறையினரிடம் விசாரணை நடத்தப்படும்” என்றும் தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்த பிறகு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டனர் என்று கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா பாமக?


சனி, 31 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon