சந்தானத்திற்கு வந்த ‘த்ரீ இன் ஒன்’ ஆஃபர்!

சந்தானம் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார்.
காமெடியிலிருந்து கதாநாயகனாக மாறி தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சந்தானம் தனக்கான ரசிகர்களை தக்கவைத்துள்ளார். தன்னுடைய பாணியை பெரியளவில் மாற்றிக்கொள்ளாமல் அவர் பயணிப்பது குறைந்தபட்ச வெற்றியை பெற்றுத்தந்துவிடுகிறது. இந்நிலையில் தற்போது அவர் முதன்முறையாக சயின்ஸ் பிக்சன் படம் ஒன்றில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்குகிறார்.
படம் குறித்து பேசியுள்ள கார்த்திக் யோகி, “நான் இந்த திரைக்கதையை எழுதும்போதே கதாநாயகன் காமெடி, ரொமான்ஸ், அப்பாவித்தனம் ஆகியவற்றை வெளிப்படுத்தக்கூடியவராக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். இது சந்தானத்திற்கு பொருத்தமாக இருக்கும் என அவரை அணுகினேன். முதலில் திரைக்கதையின் ஒன்லைன்களை கூறச் சொன்னார். நான் கூறியதும் அவருக்கு பிடித்துப்போக உடனே நடிக்கச் சம்மதித்தார். சயின்ஸ் பிக்சன் பாணியில் நல்ல பொழுதுபோக்குபடமாக அமையும்” என்று கூறினார்.
மாநகரம் படத்திற்கு வசனம் எழுதியுள்ள கார்த்திக் பலூன், சவாரி ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். இந்தப் படத்தில் கதாநாயகன், வில்லன், காமெடியன் என மூன்று முக்கிய பாத்திரங்களும் சந்தானம் ஏற்றுள்ளார். நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?
டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!
பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்!
அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!
லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!