மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 23 பிப் 2020

150 இடங்களில் சிபிஐ சோதனை!

 150 இடங்களில் சிபிஐ சோதனை!

மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) நாடு முழுவதும் , சென்னை மதுரை உட்பட 150 இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 30) மாலை அதிரடி சோதனையில் ஈடுபட்டது. ரயில்வே, நிலக்கரி உள்ளிட்ட உயர்மட்ட அரசுத் துறைகள் சிபிஐ கண்காணிப்பு வளையத்துக்குள் உள்ளன. இந்த துறைகளில் ஊழல் அதிகளவு நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

ஊழலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கச் சிறப்புக் குழு ஒன்றை சிபிஐ சமீபத்தில் அமைத்தது. இந்த சிறப்புக் குழு 150 இடங்களில் சோதனையில் ஈடுபட்டது. சமானிய மக்கள் மற்றும் சிறு வணிகர்கள், அரசு அலுவலகங்களில் சேவை பெறும் இடங்களில் ஊழலால் சந்திக்கும் பிரச்சினைகளை களையும் வகையில், சோதனையில் ஈடுபட்டிருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ரயில்வே, நிலக்கரி, சுங்க வரித்துறை, இந்திய உணவுக் கழகம், இ.எஸ்.ஐ.சி, போக்குவரத்து, சி.பி.டபிள்யூ.டி, தீயணைப்பு, எஸ்டேட் இயக்குநரகம், சார் பதிவாளர் அலுவலகம், ஜி.எஸ்.டி அலுவலகம், பொதுத் துறை வங்கிகள், விவசாயத் துறை, கப்பல் போக்குவரத்து, பி.எஸ்.என்.எல், ஸ்டீல், என்.ஹெச்.ஏ.ஐ உள்ளிட்ட துறைகள் சிபிஐ கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

டெல்லி, ஜெய்ப்பூர், ஜோத்பூர், கவுகாத்தி, ஸ்ரீநகர், ஷில்லாங், சண்டிகர், சிம்லா, சென்னை, மதுரை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, புனே, காந்திநகர், கோவா, போபால், ஜபல்பூர், நாக்பூர், பாட்னா, ராஞ்சி, காசியாபாத், டேராடூன் மற்றும் லக்னோ ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!


பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்!


அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


சனி, 31 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon