மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!

அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!

மின்னம்பலம்

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டாராக வலம்வரப்போவது விஜய்தான் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஆகஸ்ட் 30) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினார்.

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது தற்போது அதிகளவில் பேசப்படுகிறது. அஜித், விஜய் இருவருக்குமிடையே உள்ள போட்டியில் யார் அந்த இடத்தை பிடிப்பார்கள் என இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக்கொள்கின்றனர். சில தினங்களுக்கு முன் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக விஜய்தான் சூப்பர் ஸ்டார் என அவரது தாய் ஷோபா சந்திர சேகர் தெரிவித்தார். நேர்கொண்ட பார்வை படத்தை பற்றி பேசும் போது அஜித் ஒரு சூப்பர் ஸ்டார் என த்ரிஷா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சீமான் ரஜினிக்கு அடுத்து விஜய் தான் சூப்பர் ஸ்டார் என கூறினார்.

“இருவருக்குமிடையே தான் பெரிய போட்டி நிலவுகிறது. ரஜினி இன்னும் எத்தனை படங்களில் நடித்துவிடுவார். சன்பிக்சர்ஸுக்கு ஒரு படம் நடிக்கிறார், அடுத்து லைகாவுக்கு ஒரு படம் நடிப்பார், மொத்தமாக இன்னும் ஒரு நான்கு படங்கள் நடித்துவிடுவாரா, அடுத்து விஜய் தான். இதை இப்போது அல்ல, 2006ஆம் ஆண்டு சன் டிவியில் வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியில் பேசும் போதே கூறிவிட்டேன்” என்றார்.

கத்தி, மெர்சல், சர்கார் என விஜய்யின் சமீபகால படங்களில் அரசியல் வசனங்கள் அதிகம் இடம்பெறுகின்றன. சீமான் அரசியல் மேடைகளில் பேசுவதைத் தான் விஜய் தனது படங்களில் பேசிவருகிறார் என அவரது கட்சியினர் பேசிவந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக சீமான் தற்போது பேசினார்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சிம்புவை கதாநாயகனாகக் கொண்டு அடுத்தடுத்து படங்கள் இயக்கவுள்ளதாக சீமான் அறிவித்தார். அப்போது அடுத்த சூப்பர் ஸ்டார் சிம்பு என்று சீமான் பேசியிருந்தார். “அண்ணாவுக்கு எம்ஜிஆர் மாதிரி, எனக்கு நீ” என்று சீமான் பேசிய அந்த பேச்சு அப்போது பிரபலமானது. ஆனால் அதன்பின் அந்தப் படங்கள் குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை. இந்நிலையில் சீமான் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறினார்.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!


பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்!


அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!


நான் சொல்வது நடப்பதே இல்லை: தமிழக ஆளுநர் வருத்தம்!


வெள்ளி, 30 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon