மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஏப் 2020

சுற்றுச்சூழல் பாதிப்பு: கேஜிஎஃப் ஷூட்டிங்கிற்கு தடை!

சுற்றுச்சூழல் பாதிப்பு: கேஜிஎஃப் ஷூட்டிங்கிற்கு தடை!

நடைபெற்று வரும் கேஜிஎஃப் 2 படத்தின் படப்பிடிப்பினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்துவதாக கோரப்பட்ட வழக்கில், கேஜிஎஃப்2 படப்பிடிப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. கன்னட திரையுலக வரலாற்றிலேயே அதிக பட்ஜெட் படமாக இப்படம் கருதப்படுகிறது. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. தேசிய திரைப்பட விருதுகளில் கே.ஜி.எஃப் படத்திற்கு சிறந்த சண்டைப் பயிற்சி, சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கோலார் தங்க வயலில் உள்ள சயனைடு மலையில் என்கிற இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இப்படப்பிடிப்பில் தினமும் பங்கேற்று வந்தனர்.

கோலார் தங்க வயல் அருகே திரைப்படத்திற்காக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பால் அந்த பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த என்.சீனிவாஸ் தாக்கல் செய்த வழக்கில், கோலார் மாவட்டத்தில் கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸில் உள்ள சயனைடு மலைகளில் படப்பிடிப்பில் அரங்கு மற்றும் படக்குழுவினரின் நடமாட்டம் காரணமாக திரைப்படத்தின் படப்பிடிப்பு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கோலார் நீதிமன்றம், உடனடியாக படப்பிடிப்பை நிறுத்துமாறு தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இவ்வழக்கு தொடர்பாக அடுத்த கட்ட விசாரணை வரும் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!


பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்!


அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!


நான் சொல்வது நடப்பதே இல்லை: தமிழக ஆளுநர் வருத்தம்!


வெள்ளி, 30 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon