மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

மாட்டுக் கறிக்கு தடை: கர்நாடக அரசு ஆலோசனை!

மாட்டுக் கறிக்கு தடை: கர்நாடக அரசு ஆலோசனை!

கர்நாடகாவில் பாஜகவின், பசு பாதுகாப்பு பிரிவு மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனை மற்றும் வைத்திருப்பதை தடை செய்யக் கோரி ஒரு மனுவை சமர்ப்பித்துள்ளது.

முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் புதிய ஆட்சி தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகின்றது. கர்நாடகாவில் மாட்டிறைச்சி விற்பனை மற்றும் வைத்திருப்பதை தடை செய்வதற்கான மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கான மனு குறித்து எடியூரப்பா தலைமையிலான கர்நாடக பாஜக அரசு தற்போது விவாதித்து வருகிறது.

இவ்விவகாரம் குறித்து கர்நாடகாவின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சி.டி.ரவி தி நியூஸ் மினிட்டுக்கு அளித்த பேட்டியில், கர்நாடக பசு வதை மற்றும் கால்நடை பாதுகாப்பு மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான மனு குறித்து மாநில அரசு விவாதித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது எந்த முடிவும் எடுக்காத நிலையில், நேற்று(ஆகஸ்ட் 29) நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசின் பசு பாதுகாப்பு பிரிவு குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 28ஆம் தேதி, பசு பாதுகாப்பு பிரிவு குறித்த குறிப்பாணை ஒன்றை கர்நாடக மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா அவர்களிடம் கொடுத்துள்ளோம். அந்த குறிப்பாணையில்,

2010ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் மாட்டிறைச்சி தடை செய்ய பாஜக அரசு முயன்றது, ஆனால் அப்போதைய ஆளுநர் இந்த மசோதாவை நிராகரித்தார், இப்போது பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. பசு-பாதுகாப்பு பிரிவின் தலைவர் சித்தார்த் கோயங்கா எடியூரப்பாவிடம் கடுமையான சட்டத்தை கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டார்.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!


பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்!


அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!


நான் சொல்வது நடப்பதே இல்லை: தமிழக ஆளுநர் வருத்தம்!


வெள்ளி, 30 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon