மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

லண்டனில் எடப்பாடி: தமிழகத்துக்கு கிங்ஸ் மருத்துவமனை!

லண்டனில் எடப்பாடி: தமிழகத்துக்கு கிங்ஸ் மருத்துவமனை!

லண்டனில் பிரபல மருத்துவமனையான கிங்ஸின் கிளையைத் தமிழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

முதலீடுகளைக் கவருவதற்காக வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக நேற்று (ஆகஸ்ட் 29) காலை லண்டன் சென்றடைந்தார். அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு அதிகாரிகள் சாய்குமார், விஜயகுமார், செந்தில்குமார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் லண்டன் சென்றனர். அங்கு முதலாவதாக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்த நிலையில் லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளையைத் தமிழகத்தில் நிறுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில், தமிழ்நாட்டில் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையின் கிளைகளை நிறுவிட, தமிழக அரசுக்கும் கிங்ஸ் மருத்துவமனைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தொற்றுநோய் நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் LSHTM நிறுவனத்துடன், “டெங்கு, மலேரியா நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் அந்நோய்களைக் கையாளும் வழிமுறைகள்” தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வரை லண்டனில் தங்கியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார். லண்டன் பயணம் முடிந்ததும் அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகம் திரும்பிவிடுவார் என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!


பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்!


அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!


நான் சொல்வது நடப்பதே இல்லை: தமிழக ஆளுநர் வருத்தம்!


வெள்ளி, 30 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon