மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

ஓரங்கட்டப்படுகிறாரா தோனி?

ஓரங்கட்டப்படுகிறாரா தோனி?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே ஒருநாள், டி20 தொடர்களை கைப்பற்றியுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்றுவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஆகஸ்ட் 30) தொடங்குகிறது.

உலகக் கோப்பைத் தொடர் நிறைவடைந்தவுடன், ஆரம்பமான இந்தச் சுற்றுப்பயணத்தில் மகேந்திர சிங் தோனி இடம்பெறவில்லை. தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றதால் தோனிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தோனியும் இந்திய ராணுவத்தில் 15 நாட்களுக்கும் மேலாக பயிற்சியில் ஈடுபட்டு திரும்பினார்.

தோனி இந்திய அணியிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகிவந்த நிலையில் அவரோ, அணி நிர்வாகமோ இதுபற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களில் அவர் கலந்துகொள்ளவில்லை எனும்போதே அவர் ஓரங்கட்டப்படுகிறாரா என்ற யூகம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராகச் செயல்பட்டுவருகிறார். கோலியும், ரிஷப் பந்துக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கினால் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று கூறினார்.

தோனி ராணுவப் பயிற்சி முடிந்து திரும்பியதால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், ஷிகர் தவண், ஸ்ரேயாஸ், மனீஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, க்ருனல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அகமது, நவ்தீப் சைனி ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தோனி பெயர் அறிவிக்கப்படாத நிலையில் அவர் ஓய்வுபெறும் சூழல் நெருங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்கா அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!


பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்!


அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!


நான் சொல்வது நடப்பதே இல்லை: தமிழக ஆளுநர் வருத்தம்!


வெள்ளி, 30 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon