மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

நான் சொல்வது நடப்பதே இல்லை: தமிழக ஆளுநர் வருத்தம்!

நான் சொல்வது நடப்பதே இல்லை: தமிழக ஆளுநர் வருத்தம்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறும் அறிவுரைகளைக் கேட்டு மத்திய பாஜக அரசு தமிழக நிர்வாகத்தில் தலையிடுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் எதார்த்தம் என்னவோ வேறு மாதிரி இருக்கிறது என்கிறார்கள் நமது ஆளுநர் மாளிகை சோர்ஸுகள்.

“தனக்கு நெருக்கமான தமிழக பாஜக தலைவர்கள் சிலரிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனக்கு இருக்கும் நெருக்கடிகளையும், வருத்தங்களையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதன்படி ஆளுநர் மாளிகையில் தலைமைச் செயலாளருக்கு இணையான அந்தஸ்தில் இருக்கும் ராஜகோபால் ஐ.ஏ.எஸ். சின் சில நடவடிக்கைகளில் ஆளுநருக்கு உடன்பாடு இல்லை என்று தெரிகிறது. ராஜகோபால் ஐ.ஏ.எஸ். துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் சிபாரிசு மூலமாக நேரடியாக நியமிக்கப்பட்டவர் என்கிறார்கள். அந்த அடிப்படையில் அவர் ஆளுநர் மாளிகையில் இருந்து தனி ராஜாங்கம் செய்துவருவதாகவும் ஒரு தகவல் அதிகார வட்டாரங்களில் அனைவரும் அறிந்ததே. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஆளுநரின் செயலாளரை மையப்படுத்தி ஒரு சர்ச்சை எழுந்ததும் இதன் அடிப்படையில்தான்.

இந்த நிலையில் ராஜகோபால் ஐ.ஏ.எஸ்.சை மாற்றிவிட்டு தனக்கு ஏதுவான ஒரு அதிகாரியை நியமிக்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நேரிலேயே சில முறை வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஆளுநர். ஆனால் இதுவரைக்கும் ராஜகோபாலை ஆளுநராலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. இதுதான் ராஜ்பவனுக்குள் நடக்கும் தற்போதைய அதிகார நிலவரம்” என்கிறார்கள் ராஜ்பவனில் நடப்பதை அறிந்தவர்கள்.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!


பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்!


அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!


நான் சொல்வது நடப்பதே இல்லை: தமிழக ஆளுநர் வருத்தம்!


வெள்ளி, 30 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon