மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 ஆக 2019

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து 29,816 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கம் ஒரு கிராம் ரூ.3021க்கும், பவுன் ரூ.24,168க்கும் விற்பனையானது. அதனைத்தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து கொண்டே வந்தது. இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.26,480க்கு விற்பனை ஆனது. இன்றைய நிலவரப்படி, இந்த ஆண்டு மட்டும் சவரன் ஒன்றிற்கு 5648 ரூபாய் அதிகரித்துள்ளது. அதிலும் இந்த மாதம் மட்டும் சவரன் ஒன்றுக்கு 3336 ரூபாய் அதிகரித்துள்ளது.

இன்று சவரன் ஒன்று 29,816 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் இன்னும் 184 ரூபாய் அதிகரித்தால் 30000 ரூபாயை எட்டிவிடும். தற்போது ஒரு கிராம் தங்கம் 3,727 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டிருக்கும் நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. மேலும் உலகச் சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகிறது. இதுவே தங்கத்தின் விலையேற்றத்திற்கான காரணமாக கூறப்படுகிறது.

தங்கத்தை போலவே வெள்ளியும் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.51.90க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.51 ஆயிரத்து 900க்கும் விற்பனை ஆகிறது.


மேலும் படிக்க


முதல்வர் சுற்றுப்பயணம்: காவல் துறை அதிகாரியுடன் மோதிய அமைச்சர்!


டிஜிட்டல் திண்ணை: “என் உடலையும் தந்தேன் பணமும் தந்தேன்”- ப.சிதம்பரத்துக்கு எதிராக இந்திராணி வாக்குமூலம்


லண்டனில் திருமாவளவனுக்கு நடந்தது என்ன?


சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுத்த நீதிபதிக்குப் புதிய பதவி!


பிரசாந்தை இயக்கும் கெளதம் மேனன்


தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

5 நிமிட வாசிப்பு

தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

3 நிமிட வாசிப்பு

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

வியாழன் 29 ஆக 2019