மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 22 ஜன 2021

நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?

நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?வெற்றிநடை போடும் தமிழகம்

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டது. தமிழக திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலானது. 73 கோடி ரூபாய் வருமானத்தை தயாரிப்பாளருக்கு பெற்றுத்தந்தது.

விஸ்வாசம் வெளியாகி 7 மாதங்கள் கழித்து ஆகஸ்ட் 8அன்று அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியானது. விஸ்வாசம் படத்திற்கு வலுவான போட்டி ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் இருந்தது. இந்த படத்திற்கு அப்படிப்பட்ட வலுவான போட்டியை ஏற்படுத்தக்கூடிய திரைப்படம் ஏதும் வெளியாகவில்லை.

படத்தை பற்றி கலவையான விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் அளவுக்கதிகமாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன. சினிமா பிரபலங்கள் பெண்ணுரிமை பேசும் நடிகைகள் எல்லோரும் இப்படிப்பட்ட ஒரு படத்தில் முதல் இடத்தில் இருக்கும் கதாநாயகனான அஜித் நடித்தது பாராட்டுக்குரியது என்று வெளிப்படையாகவே பாராட்டினார்கள்.

தமிழ் சினிமாவில் சக நடிகர் நடித்த ஒரு படத்தை இந்த அளவுக்கு வெளிப்படையாக இதற்கு முன்னர் சினிமா பிரபலங்கள் பாராட்டியதில்லை. இது படத்திற்கு கூடுதல் இலவச விளம்பரமாக இருந்தபோதிலும் தமிழகத்தில் வணிக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நேர்கொண்ட பார்வை சாதனை புரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்கொண்ட பார்வை படம் தொடங்கியது முதல் படம் வியாபாரமாகி வெளியாகும் நாள் வரை இப்படத்தைப் பற்றிய பரபரப்பான செய்திகளுக்கு தமிழ் ஊடகங்கள் அளவுக்கு அதிகமாகவே முன்னுரிமை கொடுத்தது. இருப்பினும் நேர்கொண்ட பார்வை அனைத்து தரப்பு மக்களாலும் ஆதரிக்கப்பட்ட படமாக இல்லாமல் போனதால் சுமார் 60 கோடி ரூபாய்க்கு குறைவாகவே திரையரங்குகள் மூலம் மொத்த வசூலாக கிடைத்திருக்கிறது.

சுமார் 35 கோடி ரூபாய்க்கு மினிமம் கேரண்டி அடிப்படையில் வியாபாரம் செய்யப்பட்ட நேர்கொண்ட பார்வை படத்தை வெளியிடும் செலவு சுமார் 5 கோடி ரூபாய். ஆக மொத்தம் 40 கோடி ரூபாய் முதலீட்டில் இப்படத்தை வெளியிட்டவர்களுக்கு இதுவரை சுமார் 35 கோடி ரூபாய் திரையரங்குகள் மூலம் வருவாயாக கிடைத்திருக்கிறது.


மேலும் படிக்க


முதல்வர் சுற்றுப்பயணம்: காவல் துறை அதிகாரியுடன் மோதிய அமைச்சர்!


டிஜிட்டல் திண்ணை: “என் உடலையும் தந்தேன் பணமும் தந்தேன்”- ப.சிதம்பரத்துக்கு எதிராக இந்திராணி வாக்குமூலம்


லண்டனில் திருமாவளவனுக்கு நடந்தது என்ன?


சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுத்த நீதிபதிக்குப் புதிய பதவி!


பிரசாந்தை இயக்கும் கெளதம் மேனன்


வியாழன், 29 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon