மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

கிச்சன் கீர்த்தனா: விநாயகர் ஸ்பெஷல் - ஜவ்வரிசிக் கொழுக்கட்டை

கிச்சன் கீர்த்தனா: விநாயகர் ஸ்பெஷல் - ஜவ்வரிசிக் கொழுக்கட்டை

விநாயகர் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் பிள்ளையார்பட்டியில் இன்று கஜமுக சம்ஹாரம் நடைபெறுகிறது. முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானுக்கு மிகவும் விருப்பமான பலகாரம், கொழுக்கட்டை. வரப்போகும் விநாயகர் சதுர்த்திக்கு உங்கள் வீட்டுப் பூஜையறையில் வைத்துப் படைக்க, வித்தியாசமான சுவையில் இந்த ஜவ்வரிசி கொழுக்கட்டையைச் செய்து அசத்தலாம்.

என்ன தேவை?

மாவு ஜவ்வரிசி - ஒரு கப் (டிபார்ட்மென்டல் கடைகளில் கிடைக்கும்)

அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

தண்ணீர் - ஒரு கப்

உப்பு - 2 சிட்டிகை

பூரணம் செய்ய:

தேங்காய்த் துருவல் - அரை கப்

ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை

சர்க்கரை - கால் கப்

எப்படிச் செய்வது?

மாவு ஜவ்வரிசியைச் சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊறவைத்துத் தண்ணீரை வடிக்கவும். அதனுடன் ஜவ்வரிசி மாவு, உப்பு சேர்த்து நன்கு பிசையவும். பிசைய முடியவில்லையெனில் மிக்ஸியில் பல்ஸ் மோடில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும் (அதிக நேரம் அரைக்க வேண்டாம்). பூரணம் செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். ஜவ்வரிசி மாவைச் சிறிய கிண்ணங்களாகச் செய்து, நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி பூரணம் வெளியே வராதவாறு உருட்டவும். பிறகு கொழுக்கட்டைகளை ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: சிவப்பு அரிசி காரக் கொழுக்கட்டை


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: “என் உடலையும் தந்தேன் பணமும் தந்தேன்”- ப.சிதம்பரத்துக்கு எதிராக இந்திராணி வாக்குமூலம்


லண்டனில் திருமாவளவனுக்கு நடந்தது என்ன?


கேர்டேக்கர்: துரைமுருகன் கிண்டல்!


வெளிநாடு புறப்படுகிறார் எடப்பாடி: இரு வார அரசியலில் என்ன நடக்கும்?


எடப்பாடி பயண மர்மத்தை உடைக்கும் ஸ்டாலின்


வியாழன், 29 ஆக 2019

chevronLeft iconமுந்தையது