மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 ஆக 2019

சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுத்த நீதிபதிக்குப் புதிய பதவி!

சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுத்த நீதிபதிக்குப் புதிய பதவி!

ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுத்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிக்கு அவரது ஓய்வுக்குப் பின்னர் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுனில் கவுர், தீர்ப்பைத் தள்ளிவைத்துக் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தான் ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த வழக்கில் அவசர அவசரமாக ஆகஸ்ட் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய சுனில் கவுர், ‘இதுபோன்ற கடுமையான பொருளாதாரக் குற்ற வழக்குகளுக்கு முன்ஜாமீன் வழங்குதல் என்ற முறையையே சட்டத்திலிருந்து நீக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற இதுதான் சரியான நேரம். இந்த வழக்கில் ப.சிதம்பரம் கிங்பின் (King pin) ஆகச் செயல்பட்டிருக்கிறார்’ என்று குறிப்பிட்டு சிதம்பரத்தின் முன்ஜாமீன் கோரிக்கையை நிராகரித்தார். அதாவது சதிக் கும்பலின் தலைவர் என்று பொருள்பட சொல்லியிருந்தார். முன்ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து கடந்த 21ஆம் தேதி இரவு ஐ.என்.எக்ஸ் வழக்கில் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இதற்கிடையே நீதிபதி சுனில் கவுர், ஆகஸ்ட் 23ஆம் தேதியோடு ஓய்வு பெற்றார். இந்த நிலையில் அவருக்குச் சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது. வரும் செப்டம்பர் 23ஆம் தேதி மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராக அவர் பதவியேற்றுக் கொள்வார் என்று கூறப்படுகிறது. அவரின் கீழ் நான்கு உறுப்பினர்கள் செயல்படுவார்கள்.

சுனில் கவுர்தான் நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அரசு தரப்பில் விசாரிப்பதற்கு இருந்த முட்டுக்கட்டைகளை உடைத்து தனது உத்தரவின் மூலம் வழி ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதும், மத்தியப் பிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்தின் மருமகன் ரதூல் பூரிக்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் முன்ஜாமீன் மறுத்து, கடந்த வாரம் உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுனில் கவுர் தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு விசாரிக்கப்பட்டபோது காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது. இதுதொடர்பாக நாம் வெளியிட்ட செய்தியில், சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் அளிக்க மறுத்த நீதிபதி சுனில் கவுர் தன் தீர்ப்பில் தீவிரமான பொருளாதார குற்ற வழக்குகளில் முன்ஜாமீன் என்ற சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று ஒரு யோசனை தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த தீர்ப்பில் அவர் ஏர்செல்-மேக்சிஸ் என்ற வழக்கு பற்றியும் குறிப்பிடுகிறார். ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மனுதாரர் சிதம்பரம் ஏற்கனவே இடைக்கால பாதுகாப்பு பெற்றிருக்கிறார் என்பதை அந்த நீதிபதி அறிவார். ஆனபோதும் சம்பந்தமில்லாமல் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை அந்த தீர்ப்பில் அவர் குறிப்பிடுவது எதற்காக? இதிலிருந்தே அந்த நீதிபதியின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கிறது என்று புரிந்துகொள்ள முடிகிறது’ என்று கூறினார்.

இந்த நிலையில்தான் சுனில் கவுருக்குப் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது‌.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: “என் உடலையும் தந்தேன் பணமும் தந்தேன்”- ப.சிதம்பரத்துக்கு எதிராக இந்திராணி வாக்குமூலம்


லண்டனில் திருமாவளவனுக்கு நடந்தது என்ன?


கேர்டேக்கர்: துரைமுருகன் கிண்டல்!


வெளிநாடு புறப்படுகிறார் எடப்பாடி: இரு வார அரசியலில் என்ன நடக்கும்?


எடப்பாடி பயண மர்மத்தை உடைக்கும் ஸ்டாலின்


தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

5 நிமிட வாசிப்பு

தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

3 நிமிட வாசிப்பு

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

வியாழன் 29 ஆக 2019