மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 22 செப் 2020

திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகமாம்: அப்டேட் குமாரு

திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகமாம்: அப்டேட் குமாரு

அட சுவிஸ் வங்கியில இருக்குற கருப்பு பணத்தை தூக்கிட்டு வர்றதுதாங்க பேச்சு. சரி அவ்ளோ தூரம் போயி ஏன் கஷ்டப்பட்டு ட்ராவல் பண்ணணும், பக்கத்துல இருக்குற பேங்குலயே முடிச்சுடலாம்னு ரிசர்வ் பேங்குல கை வச்சுட்டாங்க.. இதுக்கு போய் ஏதோ திருடன் திருடன்னு கத்திகிட்டு இருக்காங்க.. அப்பா தூங்கும் போது அவருக்கு தெரியாம அவர் சட்டை பையில இருக்குற காசை ஆட்டையப்போடுறதுலாம் அன்னைக்கு தான் திருட்டுன்னு சொல்வாங்க. பின்னால அந்த கதையை சொல்லும் போது இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். அதுமாதிரி ரிசர்வ் பேங்க் பணத்தை தூக்குனது பின்னால வரலாறுல எப்படி சிலாகிச்சு சொல்லப் போறாங்கன்னு நினைச்சுகிட்டு இருக்கேன். நீங்க அப்டேட்டை பாருங்க. நான் போய் அடுத்து எதுக்கு ஸ்கெட்ச் போடுறாங்கன்னு பார்த்துட்டு வாரேன்.

mohanram.ko

பாண்ட்ஸ் பவுடர் போட்டு, சாந்து பொட்டு வைப்பது மேக்கப் ஆக இருந்த வரை, எல்லா பெண்களுமே அழகாக தெரிந்தார்கள்.

Mallika Nallusamy

வாழ்வில் தோற்ற தருணங்களைக் கூட வெற்றி பெற்றவர் சொன்னால்தான் கேட்கப்படுகிறது.

தோற்றவர் சொன்னால் கேளி செய்யப்படுகிறது

ரமேஷ்.ஏ

சாவி எடுக்கும் போது "டா..டா"..வைத்துவிட்டு....,

வண்டி எடுக்கும் போது "நானும் வரன்னு" அழுது அடம் பிடிப்பதெல்லாம் குழந்தையின் டிசைன்....!!!!

திரு

FM ல ஒரு விளம்பரம்... "RBI சொல்லுது உங்க பணத்த பத்திரமா வச்சிக்கோங்க. RBI சொல்லுது விவரமா இருங்க... எச்சரிக்கையா இருங்க".

நாங்க பத்திரமா தான் வச்சிருக்கோம்... நீங்க உங்க பணத்த பத்திரமா வச்சிக்கோங்க சார்...

ஜோக்கர்...

அடேய் என்னடா இது, கருப்பு பணமா??!

பாஜக ~ ஹி, ஹி அய்யோ அது கருப்பு பணமில்லை. RBI ட்ட இருந்து கடன் வாங்கின பணம்.

சிலந்தி

திருமணத்திற்கு பிறகு முன்னாள் காதலியின் நினைவுகள்..

தோன்றலின் தோன்றாமை நன்று..!!

செந்திலின்_கிறுக்கல்கள்

கணவர்கள் வீட்டிற்கு வெளியே normal mode பயணித்தாலும் வீட்டிற்கு உள்ளே எப்பொழுதும் silent mode தான்...!

எனக்கொரு டவுட்டு

மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி வழங்குகிறது ஆர்பிஐன்னு நியூஸ் பார்த்த பிறகு, இனி SBI பேங்க்குள்ள போனாவே காசு கேப்பாய்ங்களோன்னு நினைக்க தோணுது..!

பேஸ்புக் பிரபலம்

அமேசானுக்காக நீலிக் கண்ணீர் விடுகின்றனர்.

வளசரவாக்கம் மாந்தோப்புகள், நங்க நல்லூர் தென்னந்தோப்புகள் கட்டிடங்களாய் மாறிய போது சும்மா இருந்தனர்!

ரமேஷ்.ஏ

கம்பத்துடன் கூட்டணி வைத்து விட்டு...,காற்றின் சொல்கேற்ப ஆட்சி நடத்துகிறது "கொடி"....!!!!

நாகராஜ சோழன் MA. MLA

தொழில் அதிபர்கள் எந்த கவலையும் இல்லாமல் தங்கள் தொழிலை மேற்கொள்ள வேண்டும் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் #

எந்த கவலையும் இல்லாமல் பிச்சை எடுக்கற நிலைக்கு வந்துட்டாங்க ....

பாசில்

தொழில் அதிபர்கள் எந்த கவலையும் இல்லாமல் தங்கள் தொழிலை மேற்கொள்ள வேண்டும் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

அம்பானிக்கும், அதானிக்கும் ஏதும் பிரச்சனை இல்லையே

எனக்கொரு டவுட்டு

நீங்கள் எங்கு சென்றாலும் எங்கள் நெட்ஒர்க் உங்களை பின் தொடர்ந்து வரும்னு சொல்றே ஹட்ச் விளம்பரம் மாதிரி இந்த லாஸ்லியா எங்க போனாலும் கவின் பின்னாடியே போயிடுறான்..!

செந்திலின்_கிறுக்கல்கள்

நான் தொழிலதிபர் இல்லை; விவசாயி - எடப்பாடி பழனிசாமி

ஏழைதாயின் மகனோட லோயர் வெர்சன் போல?!

ஜால்ரா காக்கா

மாச சம்பளம் வாங்குறவனுக்கு எப்பவும் 20 தேதியை கடந்தாலே பொருளாதார மந்த நிலை தான்..

வானமே_எல்லை

நான் தொழிலதிபர் இல்லை; விவசாயி - எடப்பாடி பழனிசாமி#

விவசாயியா?நாங்க சேகுவரா ன்னுல நினைச்சோம்?!!!

ரமேஷ்.ஏ

பர்ஃபியூம்/பாடி ஸ்பிரே பயன்படுத்துபவர்களே தற்காலத்தில் "மூக்கு மேல விரல்" வைக்கிற அளவுக்கு வாழ்றவங்க....!!!!

-லாக் ஆஃப்


மேலும் படிக்க


லண்டனில் திருமாவளவனுக்கு நடந்தது என்ன?


கேர்டேக்கர்: துரைமுருகன் கிண்டல்!


வெளிநாடு புறப்படுகிறார் எடப்பாடி: இரு வார அரசியலில் என்ன நடக்கும்?


டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டியில் உதயநிதி- திமுக, அதிமுக வியூகம்!


ஸ்டாலின் வெளிநாடு செல்லும் மர்மம் : எடப்பாடி


புதன், 28 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon