மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 10 ஆக 2020

காயிலான் கடையில் கிடைத்த குண்டு!

காயிலான் கடையில் கிடைத்த குண்டு!

பா.ரஞ்சித் தயாரிப்பில் ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்துள்ள இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்குப்பின் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் படமே இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு. தினேஷ், ஆனந்தி, ரித்விகா, லிஜீஸ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு.

காயிலான் கடையில் வேலை செய்பவராக தினேஷ் நடித்திருக்கிறார். அவ்வபோது புதிய உடைகளை அணிந்து வருவதால் காயிலான் கடை முதலாளியின் சந்தேகத்திற்கு ஆளாகி அடியும் வாங்குகிறார் தினேஷ். அதே சமயம், ஆனந்தியின் அன்பிலும் அரவணைப்பும் தினேஷுக்கு கிடைத்து வருகின்றது. இப்படி சென்று கொண்டிருக்கும் டிரெய்லர், திடீரென ஒரு நாள் காயிலான் கடையில் தினேஷ் கண்டெடுத்த அணு குண்டினால் வேறு நிறம் பெறுகின்றது. அது அணு குண்டை அழிக்க ஒரு புறம் போராட்டம் நடைபெற, மறுபுறம் பன்னாட்டு நிறுவனங்கள் அதைக் கைப்பற்ற துடிக்கின்றன. இந்த சுவாரஸ்யமான டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

நல்ல திரைமொழி, காட்சியமைப்பு, கருப்பொருள் என பரியேறும் பெருமாள் கொடுத்த அனுபவத்தை இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு படமும் தக்க வைக்கும் என தெரிகின்றது.


மேலும் படிக்க


லண்டனில் திருமாவளவனுக்கு நடந்தது என்ன?


கேர்டேக்கர்: துரைமுருகன் கிண்டல்!


வெளிநாடு புறப்படுகிறார் எடப்பாடி: இரு வார அரசியலில் என்ன நடக்கும்?


டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டியில் உதயநிதி- திமுக, அதிமுக வியூகம்!


ஸ்டாலின் வெளிநாடு செல்லும் மர்மம் : எடப்பாடி


புதன், 28 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon