மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

லண்டனில் நடந்தது இதுதான்: திருமாவளவன்

லண்டனில் நடந்தது இதுதான்: திருமாவளவன்

லண்டன் நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

லண்டனில் உலக தமிழ் அமைப்புகளின் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், விசிக தலைவர் திருமாவளவன் எழுதிய அமைப்பாய் திரள்வோம் புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது. கூட்டத்தில் 2009 தேர்தலில் திமுக-காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது தொடர்பாக திருமாவளவன் பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கிருந்த சிலர் அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மேலும் நிகழ்ச்சியின் வரவேற்புக்காக அச்சிடப்பட்டிருந்த துண்டுக் காகிதங்களையும் கிழித்து வீசினர். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.

ஆனால், திருமாவளவன் விசிக சார்பாக நிதி கேட்டதாகவும் அதனால் ஆத்திரமடைந்த ஈழத் தமிழர்கள், அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய, பணத்தை எடுத்து திருமாவளவன் மீது வீசியதாகவும் குறிப்பிட்டு சிலர் அந்த வீடியோவை பகிர்ந்தனர். இந்த நிலையில் இந்தத் தகவலை முற்றிலும் மறுத்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 28) செய்தியாளர்களை சந்திக்கையில் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “அந்த நிகழ்வில் எதுவுமே நடக்கவில்லை. திமுகவுடன் விசிக கூட்டணி வைத்தது என்று எங்கோ கடைசியில் உட்கார்ந்திருந்த தம்பி ஒருவர் பேசினார். அவரை வெளியேற்றிவிட்டனர், அவ்வளவுதான்” என்று விளக்கம் அளித்தார்.

மேலும், “எனது அமைப்பாய் திரள்வோம் என்னும் புத்தகம் அந்த அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 10க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஈழத்தமிழர்கள், இலக்கியவாதிகள் அதில் கலந்துகொண்டு திறனாய்வு உரை நிகழ்த்தினர். ஏறத்தாழ 3 மணி நேரம் வரை அந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சாதியவாத, மதவாத சக்திகள் நான் லண்டனுக்கு மதமாற்றம் செய்யவும், பணம் திரட்டச் சென்றதாகவும் அதனால் அங்கு கூச்சல் எழுந்ததாகவும் அபாண்டமான அவதூறுகளை பரப்புகின்றனர். இது அப்பட்டமான பொய்" என்றும் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


மேலும் படிக்க


லண்டனில் திருமாவளவனுக்கு நடந்தது என்ன?


கேர்டேக்கர்: துரைமுருகன் கிண்டல்!


வெளிநாடு புறப்படுகிறார் எடப்பாடி: இரு வார அரசியலில் என்ன நடக்கும்?


டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டியில் உதயநிதி- திமுக, அதிமுக வியூகம்!


ஸ்டாலின் வெளிநாடு செல்லும் மர்மம் : எடப்பாடி


புதன், 28 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon