மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

சந்திரயான்-2 : மாறியது வட்டப்பாதை!

சந்திரயான்-2 : மாறியது வட்டப்பாதை!

மூன்றாவது முறையாக சந்திரயான்-2 விண்கலத்தின் நிலவு சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டது.

நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த ஜூலை 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

எந்த நாடும் இதுவரையில் நிலவின் தென் துருவ மண்டலத்தில் கால் பதிக்காத நிலையில் சந்திரயான்-2 விண்கலம் இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்டது முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. சந்திரயான்-2 படம் பிடித்த பூமியின் படத்தை, ஆகஸ்ட் 4ஆம் தேதி இஸ்ரோ வெளியிட்டது. அதன் பின்னர் ஆகஸ்ட் 6 ஆம் தேதி கடைசி புவி வட்டப்பாதைக்கு விண்கலம் உயர்த்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி புவிவட்டப் பாதையிலிருந்து சந்திரனின் வட்டப்பாதையை நோக்கி விண்கலத்தை செலுத்தும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆரம்பித்து ஆகஸ்ட் 20ஆம் தேதி திட்டமிட்டபடி நிலவின் நீள்வட்ட சுற்றுப் பாதையில் சந்திரயான்-2 வெற்றிகரமாக நுழைந்தது. ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று, நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திரயான்-2, நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியது. மேலும் சந்திரனின் பரப்பிலிருந்து 4375 உயரத்தில், நிலவில் இருக்கும் 71.3 கி.மீ. விட்டமுள்ள பள்ளத்தின் படத்தை எடுத்து சந்திராயன் 2 அனுப்பியது. இந்த பள்ளத்திற்கு ஜாக்சன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது திட்டமிட்டபடி இன்று (ஆகஸ்ட் 28 ஆம் தேதி) காலை 9 மணி 4 நிமிடங்களுக்கு, நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் சுற்றி வரும் உயரம் மூன்றாவது முறையாக மாற்றப்பட்டது. 1190 விநாடிகள் நீடித்த இந்த பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவில் இருந்து 179 முதல் 1412 கிலோமீட்டர் உயர சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் 2 விண்கலம் சுற்றி வர இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட்-30 ஆம் தேதி மாலை மீண்டும் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும் தொடர்ந்து வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை 1 மணி 55 நிமிடத்தில் சந்திரயான்-2 விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ள விக்ரம் எனப்பெயரிடப்பட்ட லேண்டர் கலம், தனியாக பிரிந்து நிலவில் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


கேர்டேக்கர்: துரைமுருகன் கிண்டல்!


வெளிநாடு புறப்படுகிறார் எடப்பாடி: இரு வார அரசியலில் என்ன நடக்கும்?


டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டியில் உதயநிதி- திமுக, அதிமுக வியூகம்!


முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்: ஸ்டாலின் எழுப்பும் சந்தேகம்!


விஜய்க்கு வில்லன் விஜய் சேதுபதியா?


புதன், 28 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon