மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

விஜய்க்கு வில்லன் விஜய் சேதுபதியா?

விஜய்க்கு வில்லன் விஜய் சேதுபதியா?

கோலிவுட் வட்டாரங்களில் தற்போது அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது விஜய்க்கு, விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறாரா என்பதுதான்.

பிகில் படத்தின் இறுதிகட்டப் பணிகள் வேகமெடுத்துவரும் நிலையில் தீபாவளிக்குப் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிகில் படத்துடன் கார்த்தி நடிக்கும் கைதி திரைப்படம் வெளியாவது உறுதியாகியுள்ள நிலையில் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படமும் இந்தப் பட்டியலில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.

படங்கள் மூலம் மோதுவதைக் கடந்து விஜய்யும், விஜய் சேதுபதியும் படத்துக்குள் மோத தயாராகிவருவதுதான் தற்போதைய ஹாட் டாபிக். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விஜய் 64’ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் வில்லனாக நடிக்க படக்குழு விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி ஆண்டுக்கு ஏழு, எட்டு படங்களில் நடித்துவருகிறார். நல்ல கதையம்சம் உள்ள படங்கள் என்றால் சிறப்புத் தோற்றத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துவருகிறார்.

சுந்தரபாண்டியன் படத்தில் சசிகுமாருக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு வில்லனாக நடித்தார். பேட்ட படத்தில் ரஜினிக்கு எதிராக இவர் நடித்ததும் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் விஜய்க்கு வில்லனாக இவர் நடிப்பது உறுதியானால் இரு தரப்பு ரசிகர்களையும் குஷிப்படுத்தும் அறிவிப்பாக அமையும்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மற்ற திரையுலகிலிருந்தே நடிகர்களை அழைத்துவரும் போக்கு உள்ளது. அதை மாற்றும்விதமாக முன்னணி நடிகரான விஜய் சேதுபதியை வில்லன் நடிகராகக் கொண்டுவர ‘விஜய் 64’ படக்குழு முயற்சி செய்து வருகிறது.

விஜய் சேதுபதி கைவசம் தற்போது லாபம், கடைசி விவசாயி, மாமனிதன், க.பெ.ரணசிங்கம் உள்ளிட்ட படங்கள் வரிசை கட்டியுள்ள நிலையில் தெலுங்கில் உபென்னா படத்திலும் நடித்துவருகிறார். இந்த நிலையில் விஜய் படத்துக்காக அவர் கால்ஷீட் ஒதுக்குவதில் பிரச்சினை ஏற்படுமா என்பதைத் தான் கோடம்பாக்கம் வட்டாரம் பேசிவருகிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டியில் உதயநிதி- திமுக, அதிமுக வியூகம்!


பாஜகவுக்கு நேரம் சரியில்லையா? -ஜோதிடர்களின் அரசியல் கணிப்பு!


கேர்டேக்கர்: துரைமுருகன் கிண்டல்!


ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!


அன்றும் இன்றும்: ஜெனிவாவும்... ஸ்டாலினும்... நடப்பது என்ன?


புதன், 28 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon