மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

கேர்டேக்கர்: துரைமுருகன் கிண்டல்!

கேர்டேக்கர்: துரைமுருகன் கிண்டல்!

முதல்வரின் பொறுப்புகளை கவனிக்க கேர் டேக்கர் தேவையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்து துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு 13 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக நாளை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் செல்லும் அவர், வரும் செப்டம்பர் 10ஆம் தேதிதான் தமிழகம் திரும்புகிறார். இதனை முன்னிட்டு, சென்னை கிரின்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் இல்லத்தில் அவரை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அமைச்சர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வரின் சுற்றுப் பயணத்தின்போது அவருடைய பொறுப்புகள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 27) செய்தியாளர்களை சந்தித்தபோது பதிலளித்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “இன்றைக்கு தொழில்நுட்பம் பெரிய அளவுக்கு பெருகிவிட்டது. எனவே முதல்வருடைய பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டிய அவசியமே தற்போது இல்லை. ஊடகங்கள்தான் கேர் டேக்கர், கேர் டேக்கர் என்று கூறிவருகின்றன. தமிழ்நாடு மக்களை கேர் டேக் செய்யும் அளவுதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். தமிழக அரசும் உள்ளது. முழுமையான அளவு முதலீடுகளை பெறும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பயணம் அமையும்” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவரும், திமுக பொருளாளருமான துரைமுருகன், “முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டுமானால் கேர் டேக்கர் தேவைப்படலாம். தமிழக அரசு ஒன்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்போவதில்லை.பிறகு எதற்கு கேர் டேக்கர் எல்லாம்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


பாஜகவுக்கு நேரம் சரியில்லையா? -ஜோதிடர்களின் அரசியல் கணிப்பு!


அன்றும் இன்றும்: ஜெனிவாவும்... ஸ்டாலினும்... நடப்பது என்ன?


செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon