மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

அமலாக்கத் துறை எதிர்பார்க்கும் பதிலைச் சொல்ல முடியாது: சிதம்பரம்

அமலாக்கத் துறை எதிர்பார்க்கும் பதிலைச் சொல்ல முடியாது: சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நாளை வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையின் மூன்றாம் நாளான இன்றும் வாதங்கள் நிறைவடையாததால் நாளையும் விசாரணை தொடரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தற்போது சிபிஐ காவலில் உள்ளார். அவரிடம் ஏற்கனவே 4 நாட்கள் சிபிஐ விசாரணை நடத்திய நிலையில் மேலும் 4 நாட்கள் சிபிஐ காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, போபண்ணா அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த இரு நாட்களாக நடைபெற்ற விசாரணையில் சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்த மனு இன்று(ஆகஸ்ட் 27) மதியம் 12 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில்சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி, “எப்போதும் மழுப்பலான பதிலை விசாரணையின் போது சிதம்பரம் தெரிவிப்பதாக அமலாக்கத் துறையினர் கூறுகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி, 2019 ஜனவரி 1ஆம் தேதி, ஜனவரி 21ஆம் தேதிகளில் அமலாக்கத் துறை அவரிடம் விசாரணை நடத்தியுள்ளது. இந்த விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்விகளின் நகலை அமலாக்கத் துறை தாக்கல் செய்ய வேண்டும். அப்போதுதான் சிதம்பரம் மழுப்பினாரா இல்லையா? என்பது தெரியவரும் என்று வாதிட்டனர்.

”2007ல் நடந்ததாக கூறப்படும் குற்றத்திற்கு 2009ல் திருத்தப்பட்ட சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். செய்யாத குற்றத்தை வைத்து ஒருவரை எப்படி '' கொள்ளைக் கூட்டத் தலைவன் '' என்று குறிப்பிட முடியும்” என்று அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், என்னிடம் (சிதம்பரம்) கேட்கப்படும் கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த பதிலைத் தான் கூற முடியுமே தவிர அமலாக்கத் துறை எதிர்பார்க்கும் பதிலைக் கூற முடியாது என்று சிங்வி பதில் அளித்துள்ளார்.

இதற்கு அமலாக்கத் துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா, “நாங்கள் சிதம்பரத்தைக் காவலில் எடுத்திருப்பது விசாரிக்கத்தான். ஒப்புதல் வாக்குமூலம் பெற அல்ல” என்று விளக்கமளித்தார். தொடர்ந்து சிதம்பரம் தரப்பு வாதத்துக்குப் பதில் அளிக்க அவகாசம் கோரியுள்ளார்.

இதைத்தொடர்ந்து துஷார் மேத்தா தன் வாதத்தை நாளை முன்வைக்கலாம் என்று தெரிவித்த நீதிபதிகள் சிதம்பரத்தைக் கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நாளை மதியம் வரை நீட்டிப்பதாகத் தெரிவித்தனர். நாளை சிபிஐ காவலுக்கு எதிரான மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


பாஜகவுக்கு நேரம் சரியில்லையா? -ஜோதிடர்களின் அரசியல் கணிப்பு!


அன்றும் இன்றும்: ஜெனிவாவும்... ஸ்டாலினும்... நடப்பது என்ன?


செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon