மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

ஜெயம் ரவி படத்தில் ஈரானிய நடிகை!

ஜெயம் ரவி படத்தில் ஈரானிய நடிகை!

கோமாளி படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி தற்போது நடிக்கும் புதிய படத்திற்காக அஸர்பைஜானில் முகாமிட்டுள்ளார். இந்தப் படத்தில் ஈரானிய நடிகை எல்நாஸ் நொரோஷி இணைந்துள்ளார்.

கோமாளி திரைப்படத்திற்குப் பிறகு தனது 25ஆவது படத்தில் ஜெயம் ரவி லக்‌ஷ்மன் இயக்கத்தில் நடிக்கிறார். இதற்கு முன்பாக ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். நித்தி அகர்வால் நடிக்கும் இந்தப் படத்தில் டி இமான் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் தனது 26ஆவது படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். தப்ஸி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அஸர்பைஜானில் நடைபெற்றுவருகிறது.

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் ஈரானிய நடிகை எல்நாஸ் நொரோஷி இணைந்துள்ளார். ஏற்கெனவே பல விளம்பரப் படங்களில் நடித்துள்ள அவர், இந்தி தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துவருகிறார். தற்போது முதன்முறையாக தென்னிந்திய திரைப்படம் ஒன்றில் நடித்துவருகிறார்.

மேலும் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இணையவுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. ஆனால் படக்குழு இதுகுறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. ரஹ்மான் பங்கேற்பது உறுதியானால் அவரது இசையில் ஜெயம் ரவி நடிக்கும் முதல் படம் இதுவாக அமையும்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


பாஜகவுக்கு நேரம் சரியில்லையா? -ஜோதிடர்களின் அரசியல் கணிப்பு!


அன்றும் இன்றும்: ஜெனிவாவும்... ஸ்டாலினும்... நடப்பது என்ன?


செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon