ரம்யா பாண்டியன் பத்து படத்துல நடிச்சப்ப எல்லாம் கண்டுக்காம இருந்தவங்க, ஒரு ஃபோட்டோஷூட் ரிலீஸ் பண்ணதுக்கே ஆர்மியை உருவாக்கி ‘ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே’ அப்டின்னு திட்றாய்ங்க. இதுகூட பரவால்லபா ‘தங்கம் விலை ஏறுனதால தான் ரம்யா பாண்டியனுக்கு மவுசு கூடிருச்சு’ன்னு ஒருத்தர் ஹைக்கூ அடிக்கிறார். ஒருத்தர் ரம்யா பாண்டியன் நம்பர் கேட்டு ஆஃபீஸுக்கே வந்துட்டாரு.
அவரைப் பாக்க போறதுக்குள்ள, நித்யானந்தா கேஸ் கொடுத்த மேட்டர் வந்ததால அதை டைப் பண்ணி குடுத்துட்டு போனேன். ஏன் லேட்டுன்னு கேட்டார் அந்த நண்பர். நித்யானந்தாவுக்கு 50 மில்லியன் வியூவர்ஸ் இருக்காங்களாம். அதனால அவரை ஜானி சின்ஸ் கூட கம்பேர் பண்ணி டிரெய்லர் ரிலீஸ் பண்ண ‘பப்பி’ படக்குழு மேல கம்ப்ளைன்ட் குடுத்துருக்காருன்னு சொன்னா, ‘எலேய் என் தலைவன் ஜானி சின்ஸுக்கு உலகம் முழுக்க 130 மில்லியன் வியூவர்ஸ் இருக்காங்க. அவரோட இவரை கம்பேர் பண்ண படக்குழுவை உண்டு இல்லைன்னு பண்ணிட்டு வர்றேன்னு கிளம்பிப்போய்ட்டாப்ல.
ஆத்தீ, நீங்க எல்லாம் அந்த குரூப்பாயான்னுட்டு வந்துட்டேன். நீங்க அப்டேட்டை படிங்க. நான் போய் ரம்யா பாண்டியன் அடுத்த ஃபோட்டோஷூட் ரிலீஸ் பண்ணிருச்சான்னு பாத்துட்டு வர்றேன்.
செந்திலின்_கிறுக்கல்கள்
எடப்பாடியுடன் சரத்குமார் சந்திப்பு# சாமிய லண்டண்ல இருந்து வரும் பொழுது மறக்காம ஒரு படத்துக்கு கால்ஷீட் வாங்கிட்டு வர சொல்லுங்க- மக்கள்!
கோழியின் கிறுக்கல்!!
மகளுக்காக வாங்கும் நகைகள் அம்மாவின் விருப்ப நகைகளே!!!
எனக்கொரு டவுட்டு
பெரும்பாலான பெற்றோர்களின் பிக்னிக் ஸ்பார்ட் குழந்தைகளை கூட்டி செல்லும் மருத்துவமனையாகத்தான் இருக்கும்..!
ரஹீம் கஸ்ஸாலி
எடப்பாடியுடன் சரத்குமார் சந்திப்பு.
நீங்க வெளிநாடு செல்வதால் நான் முதல்வரா இருந்துக்கறேன்னு சொல்லிட்டு போக வந்திருப்பாரு போல...
mohanram.ko
மனைவியோடு ஷாப்பிங் போகும் போது, கணவன் விரும்பியது என்று வாங்கப்படுகிறதோ, அன்றுதான் இந்தியா வல்லரசு ஆகும்
சிலந்தி
எப்படிப்பட்ட குழந்தையாய் இருந்தாலும் அழும் போது செல்போனை காட்டினால் அழுகையை நிறுத்தி விடும் அதுவும் பேசிக் மாடலாய் இல்லாமல் இருக்க வேண்டும்..!!
நல்ல நண்பன்
பிற நிறுவனங்களை மிரட்டவரும் BSNL-ன் அதிரடி Offer...!
ரூ.96க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 10 GB டேட்டா...!
ஆனா டவர் மட்டும் நீங்க நட்டுக்கனும்
நெல்லை அண்ணாச்சி
பட்ஜெட்டில் " காணாமல் " போன ரூபாய் 1.76 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி கொடுக்கிறது...
செந்திலின்_கிறுக்கல்கள்
தப்பு செய்தால் மன்னிப்பார் என்ற நம்பிக்கையில் தான் கடவுளுக்கு இங்கு மரியாதை கிடைக்கிறது!
நெல்லை அண்ணாச்சி
மோடி நன்றாக ஆங்கிலம் பேசுவார் ...ஆனால் இப்போது பேச விரும்பவில்லை...
ஜி7 மாநாட்டில் டிரம்ப்... கிண்டல்
பிளாக் லைட்
நைட் சீக்கிரமா தூங்க போனா காலைல சீக்கிரமே எழும்பலாம் என்பது தான் உலகின் மிக பெரிய பொய் !!
அபிவீரன்
இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 14 நாட்கள் முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம்
நான்தான் தமிழக முதல்வர்னு ஊர் ஊரா சொல்லிட்டு வர போறார் போலிருக்குடோவ்
காட்டுப்பயல்
ரிசர்வ் பேங்க் இல்லாத காரணத்தால் டாஸ்மாக் வைத்து வியாபாரம் பண்ணுது மாநில அரசு
N.Nataraja Subramani
எப்போ ஒரு பொண்ணு கட்டின கைலியோட வாடா.. காலம் பூரா பாத்துக்கரேன்னு சொல்லுதோ.. அப்போ தான் வல்லரசாகும்...
எனக்கொரு டவுட்டு
மேடை ஏறினதும் நடிகர். நடிகைகளுக்கு ஆட்டோமேட்டிக்கா வரும் பொய், "நான் உண்மையாவே அவங்களோட மிகப்பெரிய பேன்" என்பதே..!
ஆதிரை அஜய் குமார்
`இனி எங்களுக்குச் சமமான வாய்ப்புகள் கிடைக்கும்!' - மீண்டும் விவாத நிகழ்ச்சிகளில் தமிழக பா.ஜ. க
- தமிழிசை.
" memes போட இனி எங்களுக்கு தரமான content கிடைக்கும்"
- memes creators...
நெல்லை அண்ணாச்சி
நம்ம கிட்ட ஒரு பழைய காரு கிடக்கு ... கழுதய exchange பண்ணி நாட்டு பொருளாதாரத்தை உயரத்தலாம்....
ஆனா நம்ம சொந்த பொருளாதாரம் கவுந்துருமே..
-லாக் ஆஃப்
மேலும் படிக்க
டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்
ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!
பாஜகவுக்கு நேரம் சரியில்லையா? -ஜோதிடர்களின் அரசியல் கணிப்பு!
அன்றும் இன்றும்: ஜெனிவாவும்... ஸ்டாலினும்... நடப்பது என்ன?