மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 25 ஜன 2021

தீபாவளி ரேஸில் கார்த்தி

தீபாவளி ரேஸில் கார்த்திவெற்றிநடை போடும் தமிழகம்

தீபாவளிக்கு விஜய்யின் பிகில், விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய படங்கள் மோதவுள்ள நிலையில், தற்போது கார்த்தியும் தீபாவளி ரேஸில் இணைந்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்திற்குப் பின் இயக்கிய கைதி படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார். முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அக்டோபர் மாதம் கைதி வெளியாகும் என அறிவிப்பு முதலில் வெளியானது, அதன் பின் செப்டம்பர் வெளியீடாக இப்படம் வெளியாகும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், கார்த்தியின் கைதி திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என சற்று முன் அதிகாரபூர்வ போஸ்டருடன் அறிவித்துள்ளது படக்குழு.

ஏற்கனவே தீபாவளி வெளியீடாக விஜய்யின் பிகில், விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், கைதி படத்தின் இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. அதே சமயம், பிகில் படத்திற்குப் பின் விஜய்யின் புதிய படத்தை இயக்கப் போவது கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

2017ஆம் ஆண்டு மெர்சல், 2018ஆம் ஆண்டு சர்கார் என விஜய்யின் முந்தைய இரண்டு படங்களும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாகின. இவ்விரண்டு படங்களும் வசூலில் வெற்றி பெற்றது. அதே சமயம் முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் அப்போது வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த தீபாவளி, விஜய்க்கு சவால் நிறைந்த பண்டிகையாக இருக்கும் என தெரிவிக்கின்றன திரை வட்டாரங்கள்.

மூன்று முக்கியமான நடிகர்களின் எதிர்பார்க்கப்படும் படமும் ஒரே நாளில் வெளியாவதால், இந்த தீபாவளி ரேஸ் இப்போதே சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது.

கதாநாயகியே இல்லாத கைதி படத்தில் கார்த்தியுடன் நரேன், தீனா, ஜார்ஜ் மரியன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர் மூவிஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


பாஜகவுக்கு நேரம் சரியில்லையா? -ஜோதிடர்களின் அரசியல் கணிப்பு!


அன்றும் இன்றும்: ஜெனிவாவும்... ஸ்டாலினும்... நடப்பது என்ன?


செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon