மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

களங்கப்படுத்திட்டாங்க: நித்தியானந்தா புகார்!

களங்கப்படுத்திட்டாங்க: நித்தியானந்தா புகார்!

யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பப்பி படத்தின் மோஷன் போஸ்டரில் தன்னை தவறாக சித்தரித்ததாக நித்தியானந்தா சார்பில் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மொரட்டு சிங்கிள் என்பவர் தயாரிக்கும் திரைப்படம் பப்பி. வருண், யோகி பாபு இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

அதில் ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் படத்துடன் இணைந்து நித்தியானந்தாவின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இதற்கு அப்போதே சிவசேனா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிவசேனா அமைப்பின், மாநில துணைச் செயலாளர் செல்வம் என்பவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் நித்தியானந்தா சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு வக்கீல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், “நித்தியானந்தாவை ஆபாச நடிகருடன் இணைத்து சித்தரித்திருப்பது அவரது புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது. தயாரிப்பாளர்கள் அவதூறு பரப்பிவருகின்றனர். நித்தியானந்தா உலகம் முழுவதும் அறியப்பட்ட ஆன்மீக குரு, அவரது யூ டியூப் தளத்தில் 53 மில்லியன் பார்வையாளர்கள் உள்ளனர். 27 உலக மொழிகளில் 300க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

தணிக்கைத் துறை விதிகளின் படி ஒருவரைப் பற்றி காட்சிகள் வைக்கும் போது அது குறித்து சம்மந்தப்பட்டவரிடமிருந்தோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களிடமிருந்தோ தடையில்லா சான்றிதழ் வாங்கவேண்டும். ஆனால் அப்படியான எந்த சான்றிதழும் நித்தியானந்தா தரப்பில் வழங்கப்படவில்லை" என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூகத்தில் இத்தனை ஆண்டுகாலமாக நித்தியானந்தா கட்டியமைத்த அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் படக்குழு செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்தக் காட்சிகளை உடனடியாக நீக்கவில்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பப்பி மோஷன் போஸ்டர்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


பாஜகவுக்கு நேரம் சரியில்லையா? -ஜோதிடர்களின் அரசியல் கணிப்பு!


அன்றும் இன்றும்: ஜெனிவாவும்... ஸ்டாலினும்... நடப்பது என்ன?


செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon