மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 27 ஆக 2019

அன்றும் இன்றும்: ஜெனிவாவும்... ஸ்டாலினும்... நடப்பது என்ன?

அன்றும் இன்றும்: ஜெனிவாவும்... ஸ்டாலினும்... நடப்பது என்ன?

ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்று பேச திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, ஐநா மனித உரிமைகள் ஆணையம் அழைப்பு விடுத்துள்ள நிலையில் ஸ்டாலின் கலந்து கொள்வாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.

ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், 42வது கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதியன்று துவங்குகிறது. ஏறத்தாழ செப்டம்பர் இறுதி வரை இந்தக் கூட்டத்தொடர் நடைபெறும். இந்நிலையில், 42ஆவது ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையம் அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.

ஸ்டாலின் அனுமதி கேட்டாரா? ஸ்டாலின் அழைக்கப்பட்டாரா?

இக்கூட்டத் தொடரில் பங்கேற்க திமுக சார்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், பரிசீலனைகளுக்குப் பின், ஸ்டாலினுக்கு ஐநா அனுமதி அளித்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி வருகின்றது. உண்மை நிலவரம் என்ன? அதற்கு முன், இந்த அமைப்பு எப்படி செயல்படுகிறது எனப் பார்ப்போம்..

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம் (United Nations Human Rights Council) மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்டது. 47 இருக்கைகள் கொண்ட மனித உரிமைகள் அமைப்பானது பிரதேச ரீதியாக பிரிக்கப்பட்டு: ஆப்பிரிக்கா(13), ஆசியா(13), கிழக்கு ஐரோப்பிய நாடுகள்(6), இலத்தீன் அமெரிக்கா(8), மேற்கு ஐரோப்பா(7) எனப் பகிர்ந்தளிக்கபடுகின்றது.

அந்த இருக்கைகளில் பேசவுள்ள தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அந்த பிரதேச மக்களே தேர்ந்தெடுக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில், ஈழத்தமிழர்களின் அழைப்பின் பெயரில், ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து மனித உரிமை ஆணையத்தில் உரையாற்ற வேண்டுமென்று இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் வந்துள்ளது என்பதே உண்மை என்கின்றனர் அங்கு சென்றுவந்தவர்கள்.

ஜெனிவாவும் ஸ்டாலினும்

ஜெனிவா கூட்டத்தொடரில் ஸ்டாலின் பங்கேற்பது இது முதல்முறையல்ல. கடந்த 2012ஆம் ஆண்டில், இலங்கையில் ஈழத்தமிழர்கள் சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதற்கான தீர்மானங்கள் சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. அதன் பின்னர், அத்தீர்மானத்தை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனை சந்தித்து வழங்கினார் ஸ்டாலின். மேலும், 2012 ஆம் ஆண்டிற்கான ஜெனிவா மாநாட்டிலும் கலந்து கொண்டு டெசோ தீர்மானத்தை சமர்பித்துள்ளார்.

2017ஆம் ஆண்டில் மீண்டும் ஜெனிவா மாநாட்டிற்கு அழைக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின். ஸ்விட்சர்லாந்து செல்லும் விசாவும், பயண விமான டிக்கெட்டுகளும் ஒழுங்கு செய்யப்பட்டது. ஆனால், 48 மணி நேரத்துக்கு முன் அந்த பயணம் திடீரென ரத்தானது. கலைஞரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஸ்டாலினால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியாமல் போனது எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்தாண்டு நடைபெறவுள்ள 42ஆவது ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தொடரில் ஸ்டாலின் அழைக்கப்பட்டிருப்பது முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. அதே சமயம், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் எப்போதும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், ஸ்டாலினால் இந்த ஜெனிவா மாநாட்டில் கலந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகத்திற்கு இடமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் திமுகவுக்கு நெருக்கமானவர்கள்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி: ரிசர்வ் வங்கி


ஆந்திராவுக்கு நான்கு தலைநகரங்கள்?


கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

செவ்வாய் 27 ஆக 2019