மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

கிச்சன் கீர்த்தனா: விநாயகர் ஸ்பெஷல் - பலாப்பழ மோதகம்

கிச்சன் கீர்த்தனா: விநாயகர் ஸ்பெஷல் - பலாப்பழ மோதகம்

விநாயகர் தனக்குப் பிடித்தமான மோதகத்தை ஒரு கையில் வைத்திருப்பார். மோதகத்துக்குள் இருப்பது இனிப்பான பூரணம். மோதகம், ஆவியில் வேகவைக்கப்படுவதால் அனைத்து வயதினருக்கும் உகந்த சுவை உணவாக வரவேற்கப்படுகிறது. பிடித்துவைத்தால் கொழுக்கட்டை. இதுவே உருண்டை வடிவில் பூரணம் வைத்துச் செய்யப்படும்போது மோதகம் என்கிற சிறப்புப் பெயரைப் பெறுகிறது.

என்ன தேவை?

இடியாப்ப மாவு (அ) அரிசி மாவு - அரை கப்

உப்பு - 2 சிட்டிகை

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

பூரணம் செய்ய:

கொட்டை நீக்கிய பலாச்சுளை - 3 (துருவவும்)

தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

வெல்லத்தூள் - கால் கப்

நெய் - ஒரு டீஸ்பூன்

ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

தண்ணீரை நன்கு கொதிக்கவைக்கவும். இடியாப்ப மாவு (அ) அரிசி மாவுடன் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெந்நீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாகப் பிசையவும். வாணலியில் நெய்விட்டு சூடாக்கி தேங்காய்த் துருவல், பலாப்பழத் துருவல், வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துச் சுருள கிளறி இறக்கவும். ஆறியதும் சிறிய உருண்டைகளாக்கவும்.

பிசைந்து வைத்துள்ள மாவை மோதக அச்சில் வைத்து அழுத்தவும். அதன் நடுவில் பலாப்பழப் பூரணத்தை வைத்து மாவால் மூடவும் (மோதகத்தை நன்றாக மூடவில்லையென்றால் வேகும்போது பூரணம் வெளியே வந்துவிடும்). பிறகு மோதகங்களை இட்லிப் பாத்திரத்தில் வைத்து ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு

பலாச்சுளையைத் துருவுவதற்குப் பதிலாக மிக்ஸியில் பல்ஸ் மோடில் (Pulse mode) ஒரு நிமிடம் விட்டுவிட்டு அரைத்துத் தூளாக்கிக்கொள்ளலாம். பலாச்சுளை நன்கு பழுத்திருந்தால் பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்.

நேற்றைய ரெசிப்பி: அவல் மோதகம்


மேலும் படிக்க


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!


செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது