மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

சாக்‌ஷியின் கேள்விகள்: நீங்கள் செய்வீர்களா?

சாக்‌ஷியின் கேள்விகள்: நீங்கள் செய்வீர்களா?

-ஸ்பிளாக்கர்

பிக் பாஸ் வீட்டைப் பொருத்தவரையில் கவின் அதிகம் காணப்படும் இடம் இரண்டே இரண்டு தான். ஒன்று பாத்ரூம் கதவுக்கு அருகே. இன்னொன்று, எலிமினேட் செய்யப்படுபவர்கள் வெளியேறும் கதவுக்கு அருகே. இந்த இரண்டு இடங்களை மட்டுமே அதிகம் பயன்படுத்தும் கவின் மூன்றாவதாக ஒரு இடத்திலும் அதிகம் காணப்பட்டார். அது, பிக் பாஸ் வீட்டில் இருந்த பெண்களின் மனக்கதவின் அருகாமை.

இதில் கவின் முதலில் உள்ளே நுழைந்த கதவு சாக்‌ஷியின் மனக்கதவு. கவினின் காதல் வார்த்தைகளால் ஏமாந்துவிட்டதாக சொல்லும் சாக்‌ஷி, பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கிறார் என்பது இப்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவின் மூலம் தெரிகிறது.

ஹவுஸ்மேட்ஸிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ‘சாக்‌ஷி தான் என்னிடம் முதலில் ப்ரபோஸ் செய்தார்’ என்று கவின் சொன்னதைப் பார்த்து தாங்கிக்கொள்ள முடியாத சாக்‌ஷி, வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் மூன்று கேள்விகளைக் கேட்டிருக்கிறார்.

யார் யாருக்கு பிரபோஸ் பண்ணாங்க?

பாத்ரூமில் என்னிடம் கத்தினார் கவின். இந்த உரிமை மற்றவர்களிடம் இருக்குமா? அதன்பிறகும் மன்னித்து அவருடன் நான் பேசினேன். இதற்கு அர்த்தம் என்ன?

கல்யாணம் செய்துகொள்ள நான்கு பாய்ண்ட் வந்துவிட்டதாக என்னிடம் சொன்னார். ஷெரின் என்னைப் பார்க்க விருப்பப்பட்டால், கவின் வீட்டுக்குத்தான் வரவேண்டும் என்று சொன்னார். இப்படியெல்லாம் கவின் பேசக் காரணம் என்ன?

மேலே உள்ள மூன்று கேள்விகளைக் கேட்டபிறகு “நினைத்த நேரத்தில் மாற்றிக்கொள்ளும் உடையைப் போல பெண்களை நினைக்காதீர்கள். உங்களுக்கு வேண்டுமென்றால் நாங்கள் அப்படித் தோன்றலாம். ஆனால், நாங்கள் அப்படியல்ல” என்றும் குறிப்பிட்டிருக்கிறார் சாக்‌ஷி.

சாக்‌ஷி கேட்கும் கேள்விகள் அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை. நான் நான்கு பெண்களை காதலிக்கிறேன் என்று சொல்லி, அவர்களில் ஒரு பெண்ணை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வெளியே அனுப்பிவிட்டு, இப்போது கடைசி பெண்ணிடம் ‘நான் உன்னை குழந்தை மாதிரி பாத்துக்குவேன்’ என்று சொல்லும் கவினை மன்னிக்கவே முடியாது.

பெண்களை கேலிப்பொருளாக சித்தரிக்கிறார் என்று கவினின் மீது குற்றம் சுமத்தும் சாக்‌ஷி, பெண் இனத்தின்மீது கொண்டுள்ள பற்று சமூக அக்கறை கொண்ட ஒரு உயிரின் கருத்தாகவே கருதப்பட வேண்டும்.

கவின் மாதிரி செய்துபார்க்கவேண்டும் என இனி எந்தவொரு ஆணும் நினைக்கக்கூடாது என்ற சாக்‌ஷியின் பொதுநலக் கருத்துக்கு வலுசேர்க்கும் விதத்தில், கவின் மீது வழக்குப் பதிவு செய்து அவருக்கு சட்ட ரீதியாக தண்டனை வாங்கிக்கொடுக்க சாக்‌ஷி முயற்சித்தால், நாட்டின் எந்தவொரு இடத்திலும் ஒரு பெண், ஒரு ஆணால் பாதிக்கப்படும்போது, தவறான முடிவுகளுக்குச் செல்லாமல் சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுத்தரலாம் என்ற நம்பிக்கை ஏற்படும்.

சாக்‌ஷி அதை செய்வாரா?

“பிக் பாஸ் அரங்கத்துக்குள் நடைபெறும் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும், பிக் பாஸ் குழுவுடன் சேர்ந்து பேசிப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார் சாக்‌ஷி. இப்போது நீதிமன்றத்துக்குச் சென்றால், ஒப்பந்தத்துக்கு முரணாக செயல்பட்ட காரணத்துக்காக, 100 நாள் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் கொடுக்கப்படும் செட்டில்மெண்ட் நிறுத்தி வைக்கப்படும். எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை சாக்‌ஷி இதுபோன்ற முயற்சிகளை எடுக்கமாட்டார்” என்கிறது பிக் பாஸ் வீட்டின் ஒரு கேமரா.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி: ரிசர்வ் வங்கி


ஆந்திராவுக்கு நான்கு தலைநகரங்கள்?


செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon