மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

பல்லாவரம்: மேலதிகாரியை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் தற்கொலை!

பல்லாவரம்: மேலதிகாரியை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் தற்கொலை!

பல்லாவரத்தில் ராணுவ குடியிருப்பில் ராணுவ அதிகாரியை சுட்டுக்கொலை செய்து, வீரர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை பல்லாவரத்தில் ராணுவ குடியிருப்பு உள்ளது. அதிகாரிகளுக்கான குடியிருப்பில் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் ஜோஷி வசித்து வந்தார். இவர் சென்னை ராணுவ அகடாமியில் ஹவில்தாராக பணியாற்றி வந்தார். அவருக்குக் கீழ் ரைஃபிள் மேனாக ஜெட்ஷீர் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இருவருக்கும் இடையே பணி ரீதியாகப் பிரச்சினை இருந்ததாகத் தெரிகிறது. நேற்று இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் பிரவீன்குமார் உறங்கச் சென்றுள்ளார். பிரவீன்குமார் மீது ஆத்திரத்திலிருந்த ஜெட்ஷீர் நள்ளிரவு அவரது வீட்டுக்கு சென்று அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் ஜெட்ஷீர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நள்ளிரவில் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் பிரவீன் குமார் வீட்டுக்குச் சென்று பார்த்ததில் இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பல்லாவரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்குப் பின்னரே முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி: ரிசர்வ் வங்கி


ஆந்திராவுக்கு நான்கு தலைநகரங்கள்?


செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon