மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

மீண்டும் பாஜகவினர்!

மீண்டும்  பாஜகவினர்!

தமிழகத்தில் தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக மீண்டும் பங்கேற்கும் என்று மாநில பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் வெற்றி பெற்ற பாஜக தென்னிந்தியாவில் வெற்றி பெற வில்லை. குறிப்பாகத் தமிழகத்தில் ஒரு இடத்தை கூட கைப்பற்றவில்லை. இந்த நிலையில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி தமிழிசை சவுந்தரராஜன் “தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள், கட்சிகளின் நிலைப்பாடுகளையும் கருத்துக்களையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது. ஆனால், சமீப காலமாக விவாதங்களில் சமநிலையும் சமவாய்ப்பும் இல்லாததால் தற்போது பாஜகவின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.

அன்று முதல் பாஜக நிர்வாகிகள் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கவில்லை. இந்தநிலையில் தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக நிர்வாகிகள் மீண்டும் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ள தமிழிசை, பங்கேற்பவர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார். அதன்படி, வானதி சீனிவாசன், நைனார் நாகேந்திரன், கே.டி. ராகவன், ஸ்ரீனிவாசன், எஸ்.ஆர். சேகர் உட்பட 27 பேர் கே.எஸ். நரேந்திரனால் ஒருங்கிணைக்கப்பட்டு விவாதங்களில் கலந்து கொள்வார்கள். இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் கருத்துகள் மட்டுமே கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்துக்களாக ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தமிழிசை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி: ரிசர்வ் வங்கி


ஆந்திராவுக்கு நான்கு தலைநகரங்கள்?


செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon