மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி: ரிசர்வ் வங்கி

மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி: ரிசர்வ் வங்கி

மத்திய அரசுக்கு இந்திய ரிசர்வ் வங்கி 1 லட்சத்து 76 ஆயிரத்து 51 கோடி ரூபாயை வழங்க முன் வந்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கடந்த 2018 நவம்பர் மாதம், ரிசர்வ் பேங்க் வசம் இருக்கும் இருப்புத் தொகை ஒரு லட்சம் கோடியை மத்திய அரசு கேட்டதாகவும் அதை வழங்க ரிசர்வ் வங்கி மறுத்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் நேற்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ரிசர்வ் வங்கியின் போர்டு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 51 கோடி ரூபாயை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது அந்தக் குழுவின் பரிந்துரையை ஏற்று ரிசர்வ் வங்கியின் போர்டு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நாட்டில் கடந்த சில வாரங்களாக பொருளாதார மந்தநிலை நிலவிவருவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்து வந்தனர். மேலும் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆட்டோமொபைல் விற்பனை சரிந்துவிட்ட நிலையில் பல முக்கிய தொழில் நிறுவனங்கள் தங்களது வேலைவாய்ப்பு வழங்கும் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார மந்தநிலை என்பது இல்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால், ரிசர்வ் வங்கி இப்போது மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கியதில் இருந்து இந்தியா பொருளாதார மந்த நிலையில் இருப்பது தெளிவாகிறது என்கிறார்கள் பொருளாதார ஆய்வாளர்கள்.


மேலும் படிக்க


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!


செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon