மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

மர்மப் பொருள் வெடித்து ஒருவர் பலி; நான்கு பேர் படுகாயம்!

மர்மப் பொருள் வெடித்து ஒருவர் பலி; நான்கு பேர் படுகாயம்!

திருப்போரூர் அருகே மர்மப் பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த மானாமதியில் கங்கை அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான குளத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகத் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கோயில் குளத்தைச் சீரமைக்கும் பணியில் அப்பகுதி இளைஞர்களும் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சிறிய அளவிலான பெட்டி ஒன்று கிடந்துள்ளது.

அதை எடுத்துவந்த அவர்கள் குளக்கரையில் வைத்து திறக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது, அந்தப் பெட்டியானது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில், ஐந்து பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அங்கு ஓடிச் சென்று ஐந்து பேரையும் மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சூர்யா என்னும் இளைஞர் சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார். மற்ற நான்கு பேரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோயில் குளத்தைச் சுத்தம் செய்யும்போது மர்மப் பொருள் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாகத் தகவல் வந்திருக்கும் நிலையில், வெடித்த மர்மப் பொருள் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அது சிறிய வடிவிலான ராக்கெட் போன்று உள்ளதாகவும், அது எப்படி அந்தக் கோயில் பகுதிக்கு வந்தது என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்த பிறகே வெடித்த பொருள் குறித்த விரிவான தகவல் கிடைக்கும்.


மேலும் படிக்க


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி!


ப.சிதம்பரத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!


லண்டனில் அமைப்பு திரட்டும் திருமாவளவன்


வருமான வரியை ஒழிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon