மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

முதல்வருக்கு நம்பிக்கை இல்லையா? சிபிஎம்

முதல்வருக்கு நம்பிக்கை இல்லையா? சிபிஎம்

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளைக் கவர அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். வரும் 28ஆம் தேதி சுற்றுப் பயணம் செல்லும் முதல்வர், செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகம் திரும்புகிறார். பயணத்தின்போது வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழகத் தொழிலதிபர்களைச் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு கோரிக்கை வைக்கவுள்ளார்.

ஆனால், வெளிநாட்டுப் பயணத்தின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பொறுப்புகளைத் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட யாரிடமும் ஒப்படைக்கவில்லை என்றும், முக்கிய முடிவுகள் தொடர்பாக வெளிநாட்டிலிருந்தபடியே அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. தஞ்சாவூரில் நேற்று (ஆகஸ்ட் 25) செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இதை விமர்சனம் செய்துள்ளார்.

அவர் கூறுகையில், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செல்கிறார். பொதுவாக ஒரு முதல்வர் வெளிநாட்டுக்குச் செல்லும்போது அவரது பணிகளை முக்கிய அமைச்சர்களிடம் ஒப்படைத்துச் செல்வது வழக்கம். ஆனால், மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லாமல் அவர், தனது பணிகளை யாரிடமும் ஒப்படைக்கவில்லையா எனச் சந்தேகம் எழுகிறது. வெளிநாட்டுக்குச் சென்று விட்டுத் திரும்பும்போது தனது பதவி பறிபோகுமா என்று பயப்படுகிறாரா என்று தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி!


ப.சிதம்பரத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!


லண்டனில் அமைப்பு திரட்டும் திருமாவளவன்


வருமான வரியை ஒழிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon