மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

சந்திராயன் 2 வெளியிட்ட நிலாவின் புதிய புகைப்படம்!

சந்திராயன் 2 வெளியிட்ட நிலாவின் புதிய புகைப்படம்!

சந்திராயன் 2 விண்கலம் எடுத்துள்ள நிலாவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று வெளியிட்டுள்ளனர்.

நிலாவின் தென்துருவ பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் 2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த ஜூலை 22ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதுவரை எந்த நாடும் நிலாவின் தென் துருவ மண்டலத்தில் கால் பதிக்காத நிலையில், இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலனை அனுப்பியுள்ளது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சந்திராயன் 2 முதன்முதலாக படம் பிடித்த பூமியின் படத்தை, இஸ்ரோ ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியிட்டது. அதன் பின், ஆகஸ்ட் 6 ஆம் தேதி, 5ஆவது மற்றும் இறுதி புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது. ஆகஸ்ட் 14ஆம் தேதி புவிவட்டப் பாதையிலிருந்து சந்திரனின் வட்டப்பாதையை நோக்கி விண்கலத்தை செலுத்தும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் செயல்படுத்தினர். ஆகஸ்ட் 20ஆம் தேதி திட்டமிட்டபடி நிலாவில் நீள்வட்ட சுற்றுப் பாதையில் சந்திராயன் 2 நுழைந்தது. ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று, நிலாவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திராயன் 2, நிலாவை புகைப்படம் எடுத்து அனுப்பியது.

இந்நிலையில், இன்று இஸ்ரோ நிலாவில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்களை மக்களின் பார்வைக்காக வெளியிட்டிருக்கிறது. நிலாவில் உள்ள 71.3 கி.மீ. விட்டமுள்ள ஜாக்சன் என்று பெயரிடப்பட்டுள்ள பள்ளத்தின் படத்தை எடுத்து சந்திராயன் 2 அனுப்பியிருக்கிறது. சந்திரனின் பரப்பிலிருந்து 4375 உயரத்தில் இவை எடுக்கப்பட்டுள்ளன.

மேக், மித்ரா, கொரோலேவ் என்று பெயரிடப்பட்டுள்ள நிலாவின் பள்ளங்களையும் அப்படத்தில் குறிப்பிட்டுள்ளது இஸ்ரோ.


மேலும் படிக்க


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!


இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon