மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

சூர்யா படத்திற்கு அடுத்த சிக்கல்!

சூர்யா படத்திற்கு அடுத்த சிக்கல்!

காப்பான் திரைப்படத்துக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தற்போது கதைத் திருட்டுப் புகாரும் எழுந்துள்ளது.

காப்பான் திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் 2.0 படத்திற்காக விநியோகஸ்தர்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாயை திரும்பக் கொடுக்க வேண்டும். இந்நிலையில் காப்பான் படத்தின் ஏரியா உரிமைகளை அவுட்ரேட் அல்லது விநியோக முறையில் வாங்க வேண்டாம் என தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு காய் நகர்த்தி வருகிறது.

இந்நிலையில் படம் தற்போது புதிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் காப்பான் படத்தின் கதை தன்னுடையது என்றும் அதைத் திருடி கே.வி.ஆனந்த் படம் இயக்கியுள்ளதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 26) நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜான் சார்லஸ் தரப்பில், “ தான் 10 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் கதைகளை எழுதி வருகிறேன், கடந்த 2014-2016ம் ஆண்டுகளில் ‘சரவெடி’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதியிருந்தேன். பத்திரிகை நிருபரான கதாநாயகன், இந்திய பிரதமரிடம் பேட்டி காணும்போது, விவசாயம், நதி நீர் இணைப்பு, நதி நீர் பங்கீடு ஆகியவற்றின் நன்மை குறித்து எடுத்துரைப்பார்.

இந்த கதையை இயக்குநர் கே.வி.ஆனந்திடம் விரிவாகக் கூறினேன். அவர் கதையை நன்றாக உள்வாங்கிக் கொண்டார். எதிர்காலத்தில் இந்த கதையைப் படமாக்கும்போது எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். நானும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன். இந்த நிலையில், என்னுடைய சரவெடி கதையை காப்பான் என்ற பெயரில் கே.வி.ஆனந்த் படமாக்கியுள்ளார்.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. அதில் நதிநீர் இணைப்பு மற்றும் பங்கீடு குறித்தும், விவசாயம் குறித்தும் பத்திரிகையாளராக நடித்துள்ள கதாநாயகன் பிரதமருக்கு விளக்கம் அளிக்கிறார். என்னுடைய கதையின் தலைப்பை மாற்றி எடுத்துள்ளனர். எனவே, காப்பான் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்” என்று குற்றம் சாட்டப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விசாரணையை வருகிற செப்டம்பர் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

சூர்யா, சாயிஷா, மோகன் லால், ஆர்யா உள்ளிட்ட பெரும் நட்சத்திரக் கூட்டணி இணைந்து உருவாக்கியுள்ள காப்பான் திரைப்படத்தை செப்டம்பர் 26ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.


மேலும் படிக்க


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!


இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon