மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

பாஜக தலைவர்கள் தொடர் மரணம்! பகீர் காரணம்

பாஜக தலைவர்கள் தொடர் மரணம்! பகீர் காரணம்

பாஜகவின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் அண்மையில் காலமானார். இன்னொரு மூத்த தலைவரான அருண் ஜேட்லி ஓரிரு நாட்கள் முன்னர் காலமானார்.

இந்நிலையில் அருண் ஜேட்லிக்கு மத்தியபிரதேச மாநில பாஜக அலுவலகத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா பேசிய பேச்சு அவர் மீதான சர்ச்சைக் காரர் என்ற முத்திரையை இன்னும் அழுத்தமாக்கியிருக்கிறது.

“கொஞ்ச நாள் முன்பு ஒரு மகராஜ் (குரு) என்னிடம், ‘பாஜகவுக்கு கெட்ட நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் பாஜகவை எதிர்ப்பதற்கு தீய சக்திகளை ஏவி விட்டிருக்கிறார்கள்’ என்று சொன்னார். ஆனால் நான் அதை காலப் போக்கில் மறந்துவிட்டேன். நமது தலைவர்கள் ஒவ்வொருவராய் மறைந்துகொண்டிருப்பதை நினைக்கும்போது அந்த மகராஜ் சொன்னது உண்மைதானோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

நம்மை நேரடியாக எதிர்க்க முடியாத எதிர்க்கட்சிகள் மாய மந்திரங்கள் தீய சக்திகளை ஏவி நமது தலைவர்களின் உயிரைப் பறித்து வருகிறார்களோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது” என்று பேசியிருக்கிறார் பிரக்யா.

வாஜ்பாயைத் தொடர்ந்து கோவா முன்னாள் முதல்வர் பாரிக்கர், கர்நாடகத்தைச் சேர்ந்த அனந்தகுமார், சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி என பாஜகவின் முக்கியப் பிரமுகர்கள் மரணத்தை எல்லாம் வரிசைப்படுத்தி பிரக்யா இப்படி சொல்லியிருப்பது அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உடல் நலம் குன்றியதால் தலைவர்கள் மரணம் அடைவதில் கூட அரசியல் செய்கிறது பாஜக என்றும் சமூக தளங்களில் கருத்துகள் குவிகின்றன.


மேலும் படிக்க


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!


இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon