மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

அடுத்த ரவுண்டுக்கு ரெடியான பிக்பாஸ் சாக்‌ஷி !

அடுத்த ரவுண்டுக்கு ரெடியான பிக்பாஸ் சாக்‌ஷி !

பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே இருப்பவர்கள் மட்டுமின்றி வெளியேற்றப்பட்டவர்கள் குறித்தும் பார்வையாளர்கள் விவாதித்தும் விசாரித்தும் வருகின்றனர்.

அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறிய சாக்‌ஷி அகர்வால் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது. சாக்‌ஷி வீட்டிற்குள் இருந்த போது அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம் இன்னும் குறையவில்லையோ என்ற சந்தேகம் கிளம்பியது. தொடர்ந்து ஒளிபரப்பான எபிசோடுகளிலும் சாக்‌ஷிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் படியான விஷயங்களே அதிகமாக நிகழ்ந்ததுதான் இந்த சந்தேகத்திற்குக் காரணம். எந்த அன்பிற்காக அவர் ஏங்கினாரோ அந்த அன்பு முழுவதுமாக மற்றொருவருக்கு பகிரப்படுவது சாக்‌ஷியை எந்த அளவு பாதிக்கும் என்று யோசித்து அவரது ரசிகர்களும் கவலைப்பட்டு வந்தனர்.

ஆனால் ரசிகர்களின் இந்த சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் விடையளிக்கும் விதத்தில் அடுத்த கட்ட நகர்விற்கு சாக்‌ஷி தயாராகிவிட்டார் என்பதை உணர்த்தியுள்ளார். அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவுள்ளார் என்பதை உறுதி செய்யும் விதத்தில் ஃபோட்டோ ஷூட் ஒன்றையும் சமீபத்தில் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. மாடர்ன் டிரெஸ் போட்டு கவர்ச்சிகரமாகவும், புடவை கட்டி பொட்டு வைத்து ‘தமிழ்ப் பெண்ணாகவும்’ சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் மனைவி அனிதா ரஞ்சித் ஒருங்கிணைத்த ஃபேஷன் ஷோவிலும் பங்கேற்றிருந்தார். இதனை வைத்துப் பார்க்கும் போது சாக்‌ஷி திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க ஆயத்தமாகி விட்டார் என்பது தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே அவர் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்திருந்தார். தற்போது ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து மற்றொரு திரைப்படத்திலும் அவர் நடித்துவருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று(ஆகஸ்ட் 25) ஒளிபரப்பான எப்பிசோடில் கஸ்தூரி வெளியேற்றப்பட்டு தற்போது சேரன், தர்ஷன், சாண்டி, கவின், முகேன், லாஸ்லியா, ஷெரின், வனிதா என்று எட்டு போட்டியாளர்களே இருக்கும் நிலையில் போட்டி சூடுபிடித்திருக்கிறது.


மேலும் படிக்க


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!


இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon