மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

விஸ்கியில் எது பெஸ்ட்: சர்வதேசப் போட்டி!

விஸ்கியில் எது பெஸ்ட்: சர்வதேசப் போட்டி!

விஸ்கி போட்டிகளின் ஒலிம்பிக் எனக் கருதப்படும் சர்வதேச விஸ்கி கமிட்டி இந்தாண்டிற்கான சிறந்த விஸ்கி எது என்று அறிவித்துள்ளது.

2019 சர்வதேச விஸ்கி போட்டி லாஸ் வேகாஸில் உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தில் மே 15 முதல் 17 வரை நடைபெற்றது. இந்த விழாவில் தொழில்முறை வல்லுனர்களின் கண்கள் கட்டப்பட்டு உலகின் முதன்மையான விஸ்கிகளை சுவைத்து அதில் சிறந்ததை தேர்ந்தெடுத்து உலகிற்கு அறிவிப்பர். இதற்கு 100 புள்ளிகள் கொண்ட மதிப்பெண்களும் உண்டு.

விஸ்கியை மதிப்பிடும் முறை எப்படி கையாளப்படுகிறது?

1.பார்வை: நிறம் (0 புள்ளி), காட்சி அளிக்கும் முறை (5 புள்ளிகள்)

2.நுகர்தல்: தீவிரம் மற்றும் அடர்த்தி (15 புள்ளிகள்), நறுமணங்களின் அடிப்படையில் தனித்துவம் (10 புள்ளிகள்), நறுமணங்களின் இருப்பு (10 புள்ளிகள்)

3.சுவை / வாய் உணர்வு: சமநிலை (10 புள்ளிகள்), ஆல்கஹால் தன்மை(10 புள்ளிகள்), சுவைகளின் அடிப்படையில் தனித்துவம் (10 புள்ளிகள்), சுவைகளுக்கு இடையிலான சமநிலை (10 புள்ளிகள்)

4.முடித்தல்: நீளம் மற்றும் முடிவு (10 புள்ளிகள்), முடிவுத்தரம்(10 புள்ளிகள்)

2019ஆம் ஆண்டிற்கான சர்வதேச விஸ்கி போட்டியில் 97 புள்ளிகள் பெற்று க்ளென்மோரங்கி கிராண்ட் விண்டேஜ் மால்ட் முன்னிலை பெற்று விருதுகளை அள்ளியது. ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த க்ளென்மோரங்கி டிஸ்டில்லரியால் தயாரிக்கப்படும் இந்த சிங்கில் மால்ட் விஸ்கிகள், உலகப் புகழ்பெற்றவை. 1703ஆம் ஆண்டிலிருந்து இந்த நிறுவனம் விஸ்கியை தயாரித்து வருகின்றது.கோல்டன் பீப்பாய் கோப்பைக்கான இவ்வருட விருதையும் க்ளென்மோரங்கியே கைப்பற்றியது.

இந்திய மதிப்பில் க்ளென்மோரங்கி கிராண்ட் விண்டேஜ் மால்ட் விஸ்கியின் விலை எவ்வளவு தெரியுமா? 47 ஆயிரத்தி 221 ரூபாய் மட்டுமே.

இந்த வருடத்திற்கான மாஸ்டர் டிஸ்டில்லர் விருதை பெறுபவர் டாக்டர் பில் லும்ஸ்டன். கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக, டாக்டர் பில் லும்ஸ்டன் அதிக மதிப்பெண் பெற்ற சிங்கிள் மால்ட் கொண்ட விஸ்கியை(க்ளென்மோரங்கி) தயாரித்ததற்காக மாஸ்டர் டிஸ்டில்லர் விருதைப் பெறுகிறார்.

இந்த ஆண்டிற்கான சிறந்த டிஸ்டில்லரி விருதை பெறுவது ஆர்ட்பெர்க் டிஸ்டில்லரி. தொடர்ந்து இரண்டாவது வருடம், ஆர்ட்பெக் இந்த அங்கீகாரத்தைப் பெறுகிறது. இந்த நிறுவனத்தின் ஐந்து விஸ்கி தயாரிப்புகள் 90 புள்ளிகளுக்கும் மேல் பெற்றுள்ளன. அதே சமயம், இதன் பாட்டில்களும் கைவினைத்திறனில் கலை தேர்ச்சியுடன் தனித்துவமான விளங்குகின்றன.

இந்த ஆண்டிற்கான மாஸ்டர் பிளண்டர் விருதை பெறுபவர் ஸ்டீபனி மேக்லியோட். இவர் தயாரித்த ஐந்து ஸ்காட்ச் விஸ்கிகள் 90க்கும் மேற்பட்ட புள்ளிகள் பெற்றன. இப்போட்டியில் வெற்றி பெறும் முதல் பெண் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டிற்கான சிறந்த தூதுவர் விருதை ஸ்ட்ரூவன் கிராண்ட் ரால்ப் பெறுகிறார். பிரபல கிளென்பிளிச் விஸ்கியின் விளம்பரத் தூதுவராக செயல்படுகிறார் இவர்.

90 புள்ளிகளுக்கும் மேல் முதல் ஆறு இடங்களைப் பெற்ற விஸ்கிகளின் விவரம்: க்ளென்மோரங்கி கிராண்ட் விண்டேஜ் மால்ட் 1991 (97 புள்ளிகள்), க்ளென்மோரங்கி கிராண்ட் விண்டேஜ் மால்ட் 1993 (96.6 புள்ளிகள்), அர்ட்பெக் ஆன் ஓ (95.3 புள்ளிகள்), கில்கோமன் சனைக் (95.1 புள்ளிகள்), ஆர்ட்பெக் கோரிவ்ரெக்கன் (95 புள்ளிகள்), அபெர்லோர் 18 ஆண்டுகள் (94.5 புள்ளிகள்).


மேலும் படிக்க


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!


இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon