மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

பதில் சொல்லிவிட்டு பிளைட் ஏறுங்கள்: கே.எஸ்.அழகிரி

பதில் சொல்லிவிட்டு பிளைட் ஏறுங்கள்: கே.எஸ்.அழகிரி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் ஏற்கெனவே சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி .

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (ஆகஸ்ட் 26) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

“முதல்வர் அந்நிய மூலதனத்தை பெறுவதற்காக வெளிநாடு செல்வது மகிழ்ச்சியளிக்கிறது. அதை வரவேற்கிறேன். அதற்கு முன்பாக ஒரு கேள்வி. இதற்கு முன்பாக சென்னையில் இரண்டு முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தினீர்களே அதனால் பெற்றுள்ள மூலதனம் எவ்வளவு, தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் எத்தனை, அதில் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் எத்தனை என்பது குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

முதல்வர் மேல் நான் பழி சுமத்தவில்லை. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. கடந்த மாநாடுகளின் போது கிடைக்கபெற்ற மூலதனம், லாபம் ஆகியவை குறித்து தெரிவிக்கவேண்டும். உள் நாட்டிலேயே சாதிக்க முடியாதவர்கள் அமெரிக்கா சென்று என்ன செய்யப் போகிறார்கள். அமெரிக்க முதலாளிகள் கேட்கும் கேள்விக்கு முதல்வரால் பதிலளிக்க முடியுமா? விளம்பரம் தேடுவதில் தவறில்லை, அதில் ஏதேனும் பலன் இருக்க வேண்டும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருப்பதாக பிரம்மாண்டமாக விழாநடத்தப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது, எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது? இதற்காக மத்திய அரசு 10 ரூபாய்கூட ஒதுக்கவில்லை. உலக வங்கியில் கடன் கேட்க முடியுமா? மக்கள் நலன் குறித்து உலக வங்கி சிந்திக்காது. எவ்வளவு தொகையில் மருத்துவமனை கட்டப்படுகிறது, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் எவ்வளவு, எப்படி தொகையை திரும்ப செலுத்துவார்கள் என்பதைத் தான் யோசிக்கும். அதனால் அதுவும் இல்லாமல் போய்விட்டது.

நான் அமைச்சர் உதயகுமாரைப் பார்த்துக் கேட்கிறேன். ஏனென்றால் அவர்தான் இந்தத் தொகுதியைச் சேர்ந்தவர், முதல்வர் அவர்களையும் கேட்கிறேன். பாஜக அரசுக்கு இவ்வளவு ஆதரவு கொடுக்கிறீர்களே, ஏன் உங்களால் மத்திய அரசிடமிருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிதியைப் பெற்றுத்தர முடியவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை இங்கு வந்துவிட்டால் இப்பகுதி முன்னேற்றத்திற்கு வேறு எதுவும் தேவையில்லை” என்று அழகிரி கூறியுள்ளார்.


மேலும் படிக்க


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!


இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon