மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

ரொமான்டிக் காமெடிக்கு உறுதியளிக்கும் நயன்தாரா

ரொமான்டிக் காமெடிக்கு உறுதியளிக்கும் நயன்தாரா

நயன்தாரா, நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள மலையாளப் படமான லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நயன்தாரா மலையாளத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான மம்முட்டியின் புதிய நியமம் படத்துக்குப் பின் வேறு படத்தில் நடிக்கவில்லை. அந்தப் படத்துக்குப் பின், அவர் நிவின் பாலியுடன் இணைந்து நடித்துள்ள படம் லவ் ஆக்‌ஷன் டிராமா. இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

அதிரடியையும் நகைச்சுவையையும் சரிசமமாய் கொண்ட நிவின் பாலி திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். அச்சமயம், நயன்தாராவைப் பார்க்க காதலில் விழுகிறார். வழக்கமான காதல் கதையாகத் தோன்றும் இக்கதையில், நிவின் பாலி, நயன்தாரா போன்ற விருப்பமான நடிகர்கள் நடிக்கும் போது, அதை ஸ்பெஷலாக மாற்றி விடுகிறார்கள். அதை உறுதிபடுத்தும் வகையில் நல்ல ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கிறது லவ் ஆக்‌ஷன் டிராமா.

இந்தப் படத்தை வினீத் ஸ்ரீனிவாசன் தம்பியான த்யான் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். ஷான் ரஹ்மான் இசையில் ஜாமோன் டி ஜான் மற்றும் வர்கீஸ் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.

லவ் ஆக்‌ஷன் டிராமா ஓணம் வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது.

லவ் ஆக்‌ஷன் டிராமா


மேலும் படிக்க


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி!


ப.சிதம்பரத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!


லண்டனில் அமைப்பு திரட்டும் திருமாவளவன்


வருமான வரியை ஒழிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon