மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

அம்பானி பழைய இரும்பு கடை: அப்டேட் குமாரு

அம்பானி  பழைய இரும்பு கடை: அப்டேட் குமாரு

திங்கள் கிழமையை குறை சொல்றதுக்குண்ணே ஒரு குரூப் ஸ்டேட்டஸ், மீம்ஸை தூக்கிட்டு ஓடிவந்துருது. ஞாயிற்றுக் கிழமை நல்லா படுத்துதூங்கிட்டு திங்கள் கிழமை வண்டி கிளம்ப கொஞ்சம் ட்ரபுள் கொடுக்குதாம். வாரம் தவறாம வாராங்களே மத்த நாள் எல்லாம் உற்சாகமா வேலைபார்ப்பாங்களான்னு விசாரிச்சா, நாளையிலயிருந்து அடுத்து எப்ப ஞாயிற்று கிழமை வரும்ன்னு பார்த்துகிட்டு இருப்பாங்களாம். ‘ஒரு நாள்கூட லீவு எடுக்காம வேலை பார்க்கும் பிரதமர் இருக்குற நாட்டுல தான் இப்படியும் சிலபேர் இருக்காங்க’ன்னு இந்த கேப்புல ஒருத்தர் உள்ளே வந்தாரு. சரி அண்ணன் எப்படியும் அவங்க கட்சிக் காரராத்தான் இருப்பாருன்னு பேச்சு கொடுத்தேன். நீங்க எங்கண்ணேன் வேலை பார்க்கீங்கன்னு கேட்டேன். கடந்த அஞ்சு வருசமா வேலை தேடிகிட்டு இருக்கேன். கிடைச்சதும் போயிடுவேன்னாரு. முதல்ல ஏன் வேலை கிடைக்கலன்னு விசாரிங்க அப்புறம் பேசலாம்னு வந்துட்டேன். அப்டேட்டை பாருங்க

கோழியின் கிறுக்கல்!!

பொருளாதார முன்னேற்றத்தை பங்கு சந்தையில் தேடாமல், கிராம சந்தையில் தேடும் வரை நமது நிலை இப்படியே தான் இருக்கும்!!

எனக்கொரு டவுட்டு

இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 14 நாட்கள் முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம்# ஓனர் எவ்வழியோ அவ்வழியே இவர் வழியும்..!

டீ இன்னும் வரலை

வீட்ல நம்மளோட ஃபோன் எங்க இருக்குன்னு...

ரிங் பண்ணி கண்டுபிடிக்கிறதுக்காகவே

வீட்டுக்காரம்மா ஃபோனுக்கு டாப்-அப் பண்ண வேண்டியிருக்கு...

கடைநிலை ஊழியன்

உள்நாட்டு பிரச்னைக்கு தீர்வு காணாமல் இந்தியா வளராது - அமித்ஷா #

இத நீங்க உங்க நண்பர் கிட்ட ல சொல்லணும் !!

Hasan Kalifa

சீனா பொருட்களை புறக்கனிப்போம்-நாரயனன் தமிழக பாஜக.

//இதைக்கேட்டு மெல்லிய புன்னகை செய்தார்,சிலையாக இருக்கும் பட்டேல்.

amudu

"வாக்கிங்" என்பது சிலருக்கு "நடக்கும்" விசயம். பலருக்கு "நடக்காத" விசயம்.

கோழியின் கிறுக்கல்!!

அம்மா சோறு ஊட்டும் போது 'கடைசி மூணு வாய்'னு சொன்னா,

அந்த மூணு வாய் சோறும் உலக உருண்டை அளவில் தான் இருக்கும்!!

உள்ளூராட்டக்காரன்

மனைவியோட வீக் பாயிண்ட் என்னன்னு கண்டுபிடிச்சிட்டா அவங்களை நம்ம கன்ட்ரோலுக்கு கொண்டு வந்துடுலாம்

ஆனா பிரச்சனை என்னன்னா, நாம கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி, அவங்க நம்மளோட நூறு வீக் பாயிண்ட்டை கண்டுபுடிச்சிடுவாங்க

mohanram.ko

எனது அரசை மக்கள் தான்

நடத்துகிறார்கள்....மோடிஜி

மக்கள்: அய்யய்யோ, சத்தியமா நாங்க இல்ல

அன்புடன் கதிர்

பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வாகனங்களை வாங்குங்கள் - நிர்மலா சீதாராமன்

அம்பானியோ அதானியோ பழைய இரும்பு கடை ஓபன் பண்ண போரங்களோ !!

எனக்கொரு டவுட்டு

டைம் ஆச்சுடா தூங்கினது போதும் எந்திரி என்று அம்மா சொன்னதும், எழுந்து உக்காந்தே நிலையில் தூங்கும் சிறு தூக்கத்திற்கு சொர்க்கம் என்று பெயர்..!

இதயவன்

எதிர்க்கட்சியினர் பாஜக மீது தீய சக்தியை பயன்படுத்துகின்றன’- பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர் #

எப்படி நீங்க ஆர்.எஸ்.எஸ்யை பயன்படுத்துற மாதிரியா ?

செந்திலின்_கிறுக்கல்கள்

வீட்டில் பிடிக்காத சாப்பாட்ட சமைச்சு நமக்கு சாப்பிட வச்சா மாதிரி தான் திங்கட்கிழமைகள் நம் கண் முன்னே கடந்து செல்கிறது!

amudu

இளநரை வந்து விட்டதே என்று வருந்துவது negative thinking. மண்டை சொட்டையாகாமல், டை அடித்து சமாளிக்காவது நரைமுடி இருக்கே என்று நினைப்பது positive thinking.

இதயவன்

மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல முயற்சி நின்றாலும் மரணம் தான்.,முயற்சியை கைவீடாதீர்கள் # பள்ளிகல்விதுறை

அமைச்சர் செங்கோட்டையன்

மக்கள் நலனுக்காக முயற்சி செய்யாத இந்த அரசுக்கு மூச்சு இல்லையா அப்ப ?!!!

செந்திலின்_கிறுக்கல்கள்

சாமானியனை அதிகம் சிரிக்க வைத்து பார்த்ததில் செல்பிக்கு அதிக பங்குண்டு...!

அன்புடன் கதிர்

வனிதா ரெண்டாவது முறையா பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்ததும்,

மோடி ரெண்டாவது முறையா ஆட்சிக்கு வந்ததும் கிட்டதட்ட ஒண்ணு தான் !

ரமேஷ்.ஏ

குழந்தைய முன்னால உட்கார வச்சா தூங்குவாங்கனு தெரிஞ்சிதா பொருத்தமா பெயர் வச்சி இருக்கானுங்க....!!!

''பெட்''ரோல் டேங்க்.

ரஹீம் கஸ்ஸாலி

ஒயிட் ரைஸ்ல குழம்பை ஊத்தி பிசைந்து சாப்பிட சோம்பல் பட்டவன் கண்டுபிடித்ததே பிரியாணி.

-லாக் ஆஃப்


மேலும் படிக்க


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!


இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon