மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

விஜய் Vs விஜய் சேதுபதி: உறுதிப்படுத்தும் படக்குழு!

விஜய் Vs விஜய் சேதுபதி: உறுதிப்படுத்தும் படக்குழு!

விஜய் நடிப்பில் இந்த தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள பிகில் திரைப்படத்திற்குப் போட்டியாக விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் திரைப்படம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெர்சல், சர்கார் என விஜய் தனது முந்தைய இரண்டு படங்களையும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டு வசூல் வேட்டை நடத்தினார். 2017, 2018ஆம் ஆண்டுகளில் வசூலில் முன்னிலை வகித்த படங்களில் ஒன்றாக அந்த இரு படங்களும் அமைந்தன. அதே நேரத்தில் விஜய் படத்திற்குப் போட்டியாக வசூல் முக்கியத்துவம் உள்ள நடிகர்களின் படங்கள் அப்போது வெளியாகவில்லை.

பிகில் படத்தையும் தீபாவளிக்கு குறிவைத்துள்ளது படக்குழு. இந்நிலையில் தனுஷ் விஜய்க்கு போட்டியாக வரவுள்ளதாக கடந்த மாதம் தகவல்கள் வெளியாகின. துரை செந்தில் குமார் இயக்கும் பட்டாஸ் திரைப்படம் தீபாவளிப் பட்டியலில் இருந்ததாக கூறப்பட்டது. ஏற்கெனவே விஜய் - தனுஷ் படங்கள் நேரடியாக ஐந்து முறை மோதியுள்ளன. ஆறாவது முறையாக நேரடிப் போட்டியை இரு தரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க பட்டாஸ் திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது விஜய் சேதுபதி விஜய்யுடன் ரேஸில் இணையவுள்ளதாக கூறப்படுவதை உறுதிசெய்யும் விதமாக அமைந்துள்ளது சங்கத்தமிழன் படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர். படத்தை தயாரித்துள்ள விஜயா புரொடக்‌ஷன் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘தீபாவளி கொண்டாட்டம்’ எனக் குறிப்பிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

வாலு, ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய விஜய சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

விஜய் நடிக்கும் பிகில் படத்திலும் அவருக்கு இரட்டை வேடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அட்லீ இயக்கும் அந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இந்துஜா, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


மேலும் படிக்க


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!


இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon