மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஆக 2019

ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?

ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அளிக்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்படலாம் என்று நேற்று தகவல்கள் வெளிவந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அதை இன்று (ஆகஸ்டு 26) மறுத்துள்ளது. அதே நேரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டு வரும் இசட் பிரிவு கமாண்டோ பாதுகாப்பினை குறைப்பதற்கு தமிழகத்தில் இருந்து கோரிக்கைகள் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மத்திய உளவுத்துறை, வெளிவிவகார உளவுத்துறையான ரா ஆகியவற்றின் அறிக்கையின்படி முன்னாள் பிரதமர்களுக்கான பாதுகாப்பு பற்றிய ஆய்வை சீரான இடைவெளியில் மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொள்ளும். அதன்படி கடைசியாக உள்துறை அமைச்சகத்துக்குக் கிடைத்த தகவல்களின்படி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பதால், அவருக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பை திரும்பப் பெறலாம் என்று உள்துறை முடிவெடுத்திருப்பதாக நேற்று தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் இத்தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், ”மன்மோகன் இசட் பிளஸ் பாதுகாப்பைத் தொடர்ந்து பெறுவார்” என்று குறிப்பிட்டுள்ளது.

விஐபிகளுக்கான பாதுகாப்பு குறித்த இந்த விவாதத்தில் இப்போது தமிழக முன்னாள் துணை முதல்வரும், திமுக தலைவருமான மு.க,ஸ்டாலின் பாதுகாப்பு பற்றிய பேச்சும் எழுந்துள்ளது.

மத்தியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அந்த கால கட்டத்தில் தமிழகத்தில் ஸ்டாலின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி, அந்த பழியை மு.க. அழகிரி மீது போட தமிழக உளவுத்துறை ஒரு திட்டம் தீட்டியிருப்பதாக பத்திரிகைகளில் தகவல் வெளிவந்தது. இதையடுத்து இந்தத் தகவலை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திமுக எடுத்துச் சென்றது. இதையடுத்து ஸ்டாலினுக்கு இசட் பிரிவு கமாண்டோ பாதுகாப்புப் படை அளிக்கப்பட்டது. தற்போது வரை அது நீடிக்கிறது. இசட் பிரிவு பாதுகாப்பு என்பது 22 கமாண்டோ வீரர்கள் நாள் முழுதும் ஸ்டாலினுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

இந்நிலையில், “ஸ்டாலின் பாதுகாப்புக்கு தற்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதால் அவருக்கான பாதுகாப்பைக் குறைத்துக் கொள்ளலாம் என்று தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் சிலர் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளனர். இதனால்,ஸ்டாலினுக்கான இசட் பிரிவு கமாண்டோ பாதுகாப்பு தொடருமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.


மேலும் படிக்க


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!


ப.சிதம்பரத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!


இங்கு அரசியல் பேசாதீர்: கூகுள் அனுப்பிய மெமோ!


சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

திங்கள் 26 ஆக 2019