மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

வாழ்க்கை வாழ்வதற்கே!

வாழ்க்கை வாழ்வதற்கே!

சிங்கத்தைவிட உருவில் பெரியது யானை. ஆனால், காட்டுக்கே ராஜா யாரென்றால் சிங்கத்தைத்தான் சொல்கிறோம். ஏன்? அணுகும் முறைதான் காரணம்.

சிங்கம் யானையைப் பார்க்கும்போது, நீ என்னுடைய உணவு என்ற நோக்கிலும், யானை சிங்கத்தைப் பார்க்கும்போது நான் உன் உணவு என்ற பார்வையிலும்தான் அணுகும். இதுதான் ஒரு வெற்றியாளனின் அணுகுமுறை, வெற்றியின் ரகசியமும்கூட.

‘நன்றாக இருக்கிறீர்களா’ எனக் கேட்டால், பெரும்பாலானோர் சொல்லும் வார்த்தை, ‘ஏதோ இருக்கேன்’ என்றுதான் வருமே தவிர, ’சூப்பராக இருக்கிறேன்’ எனச் சொல்லக்கூட தோன்றுவதில்லை. ‘ஏன் என்னாச்சு’ என்று கேட்டுவிட்டால் போதும், பட்டியலிட்டு பக்கம் பக்கமாக தங்களின் குறைகளைக் கொட்டுவார்கள். நான் எது செய்தாலும் தவறாகவே இருக்கிறது, எது செய்தாலும் தோல்வியே கிடைக்கிறது, நான் தொட்டதெல்லாம் துலங்குவதில்லையே, அதை விட முக்கியமாக அனைவரும் பயன்படுத்தும் ஒரு வார்த்தை “எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது” என்று சொல்பவர்களையே நாம் நிறைய பார்க்கிறோம்.

வெற்றியாளர்கள் சொல்வது என்ன என்றால், நீங்கள் ஒரு செடியை நட்டு வளர்கிறீர்களென்றால் பூ பூக்கவில்லை என்றால், செடியை மாற்றாதீர்கள், சூழலை மாற்றுங்கள் என்பதுதான்.

மற்றவர்கள் நமக்குக் கொடுக்கும் தடைகளை விட, நம் பழக்கங்களே நமக்கு தடையாக இருப்பதைப் பெரும்பாலானோர் யோசிப்பதில்லை.

நம் எதிர்மறை எண்ணங்கள், பழக்கவழக்கங்கள், அணுகும் முறை, பேசும் விதம், போகும் பாதை இதையும் மாற்றினால்தான் வெற்றி உங்களோடு வாழ்க்கை முழுவதும் விளையாடும். வாழ்க்கை என்பது நாம் புலம்பிக்கொண்டே இருப்பதோ, மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என அதற்காக வாழ்வதோ அல்ல, நமக்காக நாம் சந்தோஷமாக வாழ்வதே வாழ்க்கை. இன்று நாம் எப்படி, எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை ஒரு கனம் இதை படித்து முடித்துவிட்டுச் சிந்தித்துப்பாருங்கள்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோரின் வாழ்க்கை குறிக்கோள், லட்சியம் எல்லாம் எதை நோக்கி இருக்கிறது என்றால் சமுதாயம் கண்ணில் எது அழகாகத் தெரிகிறது என்பதை நோக்கியே இருக்கிறதே தவிர, நமக்கு என்ன பிடிக்கும், நம் திறமை என்ன என்பதை நோக்கி இல்லை. முதலில் அதை மாற்றினால்தான் வாழ்க்கையின் பரிபூரணத்தை உணர முடியும்.

நன்றாக வாழ வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், எப்படி வாழ வேண்டும், நாம் சரியான பாதையில் தான் செல்கிறோமா என்றால் அதற்கு விடை எங்கிருக்கிறது? உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை, மிக சந்தோஷமான வாழ்க்கை, வெற்றியான வாழ்க்கை வெகு அருகில்தான் இருக்கிறது.

Never Ever Give up!

டாக்டர் அஷ்வின்


மேலும் படிக்க


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி!


ப.சிதம்பரத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!


லண்டனில் அமைப்பு திரட்டும் திருமாவளவன்


வருமான வரியை ஒழிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon